India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க அந்தந்த மண்டல கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மைய அலுவலகம்: 0427-2212844, கொண்டலாம்பட்டி மண்டலம்: 0427 -2461313, அஸ்தம்பட்டி மண்டலம்: 0427 -2310095, சூரமங்கலம் மண்டலம்: 0427-2387514, அம்மாபேட்டை மண்டலம்: 0427 -2263161. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சேலம் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட அகரமகால் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 4 மண்டலங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்க வைக்க போதுமான முகாம்கள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(அக்.22) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையில்; நாளை அக்.22ம் தேதி புதன்கிழமை தமிழக முழுவதும் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தொடர் மழையின் காரணமாக, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூடி அடுத்த போராட்ட தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

தீபாவளிக்கு மண்டல வாரியாக மது விற்பனை வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ரூ.170.64 கோடியுடன் மதுரை மண்டலம் முதலிடத்தில் உள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அக்.18,19, 20 ஆகிய 3 நாள்களில் மாவட்டம் முழுவதும் அமோகமாக நடந்த வியாபாரத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.153.34 கோடி மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காவலர் வீரவணக்க நாள் விழாவை முன்னிட்டு, பணியில் உயிரிழந்த காவல் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய பணி நியமன ஆணைகளை இன்று (அக்.21) வழங்கப்பட்டன. சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி தலைமையிலான நிகழ்ச்சியில், தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளில் 6 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
மொத்த பணியிடங்கள்: 8,850
கல்வித் தகுதி: 12th Pass, Any Degree.
சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <

சேலம் மாவட்டத்தில் முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் மதிப்பில் மையங்கள் அமைக்க 30% மானியம் வழங்கப்படும். 20 முதல் 45 வயதுக்குட்பட்டோர் விரிவான திட்ட அறிக்கையுடன் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP /register என்ற இணையத்தில் விண்ணப்பித்து மானியம் பெறலாம்.

சேலம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
Sorry, no posts matched your criteria.