Salem

News October 29, 2024

நேரடி முகவர்கள் தேர்வு நேர்காணல்

image

சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் வரும் நவம்பர் 8- ம் தேதி காலை 11 மணியளவில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான நேரடி முகவர்கள் தேர்வு நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் சேலம் தலைமை தபால் நிலையம் 3-வது தளத்தில் உள்ள சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் வயது, கல்வி உள்ளிட்ட சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

News October 29, 2024

நீங்களும் REPORTER ஆகலாம்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் சேலம் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்ச்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 96558-64426 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் பண்ணுங்க.

News October 29, 2024

சேலத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

image

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி யாராவது பட்டாசு எடுத்து செல்லப்படுகிறதா? என இன்ஸ்பெக்டர்கள் சிவசெந்தில்குமார் (ரயில்வே போலீஸ்), ஸ்மித் (பாதுகாப்பு படை) ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

News October 29, 2024

சேலம்: நவ.29இல் புத்தகத் திருவிழா தொடக்கம்

image

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் வரும் நவ.29ம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கவுள்ளதாக சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 9ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவிருக்கிறது. நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். பல்வேறு முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்கவுள்ளன.

News October 28, 2024

சேலம் மாநகர காவல் துறை மூலம் போலீஸ் அக்கா திட்டம் துவக்கம்

image

கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சேலம் மாநகர காவல் துறை சார்பில் போலீஸ் அக்கா திட்டம் துவங்கப்பட்டது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி கலந்து கொண்டு உரையாற்றினார். மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உள்ளிட்ட காவல்துறையினர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். 

News October 28, 2024

நாளைய தினம் மக்கள் சந்திப்புத் திட்ட முகாம்

image

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (அக்.29) காலை 9 மணிக்கும், வீரபாண்டி ஒன்றியத்திற்கு வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பகல் 2 மணிக்கும், சேலம் ஒன்றியத்திற்கு சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாலை 04.30 மணிக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் ‘மக்கள் சந்திப்புத் திட்ட முகாம்’ நடைபெறவுள்ளது.

News October 28, 2024

லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் கைது

image

சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் ரூபாய் 30,000 லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஜி என்பவரின் புதிய வீட்டிற்கு வரி நிர்ணயிக்க லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

News October 28, 2024

மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (அக்.28) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகளிடம் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

News October 28, 2024

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

image

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை இன்று (அக்.28) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டனர்.

News October 28, 2024

வேலை வாய்ப்புக்கு இலவச பயிற்சி

image

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வாட்ச், கடிகாரம் பழுது நீக்குதல் குறித்து 3 மாத குறுகிய கால இலவச பயிற்சிக்கு சேர்க்கை நடக்கவுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கு நவ.20-க்குள் அசல் ஆவணங்களான மதிப்பெண் சான்றிதழ், ஆதார், 4 புகைப்படத்துடன் சேலம் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம். 75026-28826 என்ற எண்ணை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!