Salem

News October 28, 2024

லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் கைது

image

சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் ரூபாய் 30,000 லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஜி என்பவரின் புதிய வீட்டிற்கு வரி நிர்ணயிக்க லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

News October 28, 2024

மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (அக்.28) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகளிடம் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

News October 28, 2024

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

image

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை இன்று (அக்.28) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டனர்.

News October 28, 2024

வேலை வாய்ப்புக்கு இலவச பயிற்சி

image

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வாட்ச், கடிகாரம் பழுது நீக்குதல் குறித்து 3 மாத குறுகிய கால இலவச பயிற்சிக்கு சேர்க்கை நடக்கவுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கு நவ.20-க்குள் அசல் ஆவணங்களான மதிப்பெண் சான்றிதழ், ஆதார், 4 புகைப்படத்துடன் சேலம் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம். 75026-28826 என்ற எண்ணை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News October 28, 2024

சேலத்தில் பட்டாசு விற்பனை விறுவிறு

image

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சேலம் மாநகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பட்டாசுக் கடைகளில் விதவிதமான பட்டாசுகளையும், கிப்ட் பாக்ஸ்களையும் பொதுமக்கள் தங்களது பிள்ளைகளுடன் வந்து ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News October 27, 2024

தடகளப் போட்டியில் பதக்கங்களைக் குவித்த மாணவர்கள்

image

சேலம் சஹோதயா பள்ளிகள் இணைந்து நடத்திய தடகளப் போட்டியில் உடையாப்பட்டியில் அமைந்துள்ள கைலாஷ் மான்சரோவர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாகக் கலந்து கொண்டு 15 தங்கம், 14 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

News October 27, 2024

ஜோதிடம் பார்ப்பதாக மூதாட்டியிடம் நகைப்பறித்த 2 பேர் கைது

image

மேச்சேரி உப்புபள்ளம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (60) வீட்டில் தனியாக இருந்த போது 2 பெண்கள் ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி பரிகாரம் செய்ய 1/2 பவுன் தோடு, ரூபாய் 4,000 பணம் பெற்றுக் கொண்டு மாயமாகினர். மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருச்சி தொட்டியத்தை சேர்ந்த ரேவதி (20) மற்றும் மற்றும் வைத்தீஸ்வரி (26) ஆகியோரை கைது செய்தனர்.

News October 27, 2024

மாநாட்டை நோக்கி சேலம் த.வெ.க.வினர்

image

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாடு இன்று (அக்.27) மாலை நடைபெறவுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேட்டூர், கன்னங்குறிச்சி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சேர்ந்த த.வெ.க.வினர் பேருந்துகள் மூலம் மாநாட்டு திடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

News October 27, 2024

சேலம் கோட்டத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தீபாவளி அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் கோட்டத்திலிருந்து சுமார் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை முதல் நவ.4ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், பெங்களூர், திருவண்ணாமலை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி, கடலூர், மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்டை போக்குவரத்து இயக்குனர் தெரிவித்தார்.

News October 27, 2024

கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

image

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 33,148 கன அடியிலிருந்து 30,475 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 106.480 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 73.495 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 2500 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.