Salem

News November 5, 2024

துணைவேந்தரை திரும்பப் பெற வேண்டும்

image

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் விதிகளை மீறி ஆட்சிக் குழு உறுப்பினரை நியமனம் செய்த பல்கலைக் கழகத்தின் பதிவாளர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடவும், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை ஆளுநர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News November 5, 2024

ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.4.33 லட்சம் அபராதம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் சரகத்திற்குட்பட்ட ஓமலூர், மேட்டுப்பட்டி, தொப்பூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் 804 ஆம்னி பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பு சோதனை நடத்தினர். இதில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 93 ஆம்னி பேருந்துகளுக்கு ரூபாய் 4.33 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

News November 5, 2024

பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவுச் செய்ய விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாநகராட்சியில் பதிவுச் செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின், வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெயருடன் கூடிய சான்றிதழினை இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். பெயரினை பதிவு செய்யாதவர்கள், உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயரினை பதிவு செய்து கொள்ளலாம்.

News November 5, 2024

சேலம் புத்தகத் திருவிழா

image

சேலத்தில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 9 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதாக சேலம் கலெக்டர் பிருந்தா தேவி கூறியுள்ளார். சேலம் மாநகராட்சி திடலில் புத்தகத் திருவிழா நடைபெற இருப்பதால் அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஏற்கனவே 2022 & 23 ஆகிய ஆண்டுகளில் புத்தகத் திருவிழா நடைபெற்றதை ஒட்டி இந்த ஆண்டும் புத்தகத் திருவிழா நடைபெறுவதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News November 5, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

image

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 11,526 கன அடியிலிருந்து 10,566 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 107.100 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 74.349 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

News November 5, 2024

சேலம் அரசியல் கட்சிகளுக்கு டிஐஜி முக்கிய அறிவிப்பு

image

சேலம் சரக போலீஸ் டிஐஜி உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும். இதற்கு 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. வருகிற 18-ந் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறினார்.

News November 5, 2024

சேலத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி கேட், மாநகராட்சி தொங்கும் பூங்கா மண்டபத்தில் வரும் நவம்பர் 09ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

திமுகவின் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

image

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுகவின் பாக முகவர்கள் (BLA2) ஆலோசனைக் கூட்டம், ஓமலூரில் இன்று (நவ.04) நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். கட்சியின் ஓமலூர் தொகுதிப் பார்வையாளர், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

News November 4, 2024

சேலத்தில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. ➤சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தீபாவளியை பண்டிகையை முடித்து சொந்த ஊர் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது. ➤சேலத்தில் 4 மாத குழந்தை ஆதிரை 32 நாடுகளின் தேசியக் கொடியை சரியாக கண்டுபிடித்து காட்டி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். ➤சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News November 4, 2024

நிதி உதவி வழங்கிய அமைச்சர்

image

கேரளா மாநிலத்தில் பாலக்காடு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், வள்ளி, லட்சுமணன், ராணி உள்ளிட்ட 4 பேர் நேற்று முன்தினம் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி உதவி, தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ராஜேந்திரன் இன்று நேரில் சென்று வழங்கினார்.

error: Content is protected !!