Salem

News January 9, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.9) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 9, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.9) இரவு ரோந்து காவலர்கள் விபரங்கள் வெளியிட்டுள்ளது.

News January 9, 2025

ரயில் மறியல் வழக்கில் எம்எல்ஏ, எம்பி விடுதலை

image

கடந்த 2018- ம் ஆண்டு சேலம் மாவட்டம், ஆத்தூரில் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் ஆகியோர் மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட விவகாரத்தில், ரயில்வேத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் எம்.எல்.ஏ., எம்.பி. உள்பட 5 பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

News January 9, 2025

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு

image

பொங்கல் பண்டிகை எதிரொலியாக சேலத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு பயண கட்டணம் ரூபாய் 1,000 ஆகவும், நெல்லைக்கு ரூபாய் 5,000 ஆகவும் வசூலிக்கப்படுவதால் பயணிகள் கடும் அதிர்ச்சி; வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை.

News January 9, 2025

சேலம் ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு

image

மதுரை கூடல் நகர் ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (16321), கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (16322) இன்றும் (ஜன.09), ஜன.11 தேதிகளில் விருதுநகர்- கரூர் ரயில் பாதையில் இயக்கப்படுவதால் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்காது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News January 9, 2025

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென உயர்வு

image

பொங்கல் பண்டிகை எதிரொலியாக சேலத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு பயண கட்டணம் ரூபாய் 1,000 ஆகவும், நெல்லைக்கு ரூபாய் 5,000 ஆகவும் வசூலிக்கப்படுவதால் பயணிகள் கடும் அதிர்ச்சி; வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை.

News January 9, 2025

சேலம்: உயிரிழந்த பெண்ணுக்கு நிவாரணம் அறிவிப்பு

image

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த மல்லிகாவின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தை CM ஸ்டாலின் அறிவித்தார். திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் நேற்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

News January 9, 2025

பொங்கல் பரிசுத்தொகுப்பு- தொலைபேசி எண்கள் அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட்டு வரும் பணி குறித்த கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0427-2415784, 0427-2451943, 73387-21707 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

திருப்பதியில் பலியான சேலம் பெண் இவர் தான்

image

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் மல்லிகா என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அப்பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் இறந்தனர். இவர் 16வது வார்டு தாசனுரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி மல்லிகா(50) என தெரியவந்தது. 

News January 9, 2025

சேலத்தில் இன்று முதல் பொங்கல் பரிசு

image

சேலம் மாவட்டத்தில் 1,735 ரேஷன் கடைகள் மூலம் முழு கரும்புடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு 10.78 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு இன்று (ஜன.09) முதல் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தும் வகையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

error: Content is protected !!