Salem

News October 30, 2024

சேலம் அருகே சாரல் மழை

image

சேலம்: சிங்கிபுரம் ‌சுற்றுவட்டார பகுதிகளான, பழனியாபுரம், சிங்கிபுரம், மேலக்காடு பகுதியில் 3 மணி அளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. அதை அடுத்து லேசாக சாரல் மழை பொழியத் தொடங்கியது. திடீரென சாரல் மழையால் அப்பகுதி குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. நாளையும் மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை தீபாவளி பண்டிகை என்பதால் மழையால் பட்டாசு விற்பனையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News October 30, 2024

ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தல்

image

பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு இந்திய ரயில்வேயுடன் ஒத்துழைக்கவும். எனவே வெடி, பட்டாசு போன்றவற்றை எடுத்துக்கொண்டு ரயிலில் பயணிக்க வேண்டாம். அத்தகைய பொருட்களை எடுத்துக்கொண்டு பயணம் செய்வது தண்டனைக்குரியது. பாதுகாப்பான பயணம் வேண்டும் என்றால் நிச்சயம் உங்களுடன் பட்டாசுகளையோ எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையோ எடுத்துச் செல்வதை தவிர்த்திடுங்கள் என்று சேலம் ரயில்வே கோட்டம் பயணிகளுக்கு அறிவுறுத்தல்.

News October 30, 2024

சேலத்தில் 29 லட்சம் வாக்காளர்கள்

image

சேலம் மாவட்டத்தில் நேற்று (அக்.29) வெளியிடப்பட்டுள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 14,71,774 எண்ணிக்கையிலும், பெண் வாக்காளர்கள் 14,89,420 எண்ணிக்கையிலும், இதர வாக்காளர்கள் 319 எண்ணிக்கையிலும் என மொத்தமாக 29,61,513 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

News October 30, 2024

தீபாவளி பண்டிகை: சேலம் ஆட்சியர் வேண்டுகோள்

image

சேலம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அமைதி காக்கப்படும் இடங்களின் அருகாமையில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் விபத்து, ஒலி மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும். தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கலாம் என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

சேலத்தில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤சேலத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டதில், மொத்தம் 29,61,513 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ➤ஈரோடு- சென்னை சென்ட்ரல் முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ➤சேலம் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ➤வரும் நவம்பவர் 29ஆம் தேதி சேலத்தில் புத்தகத் திருவிழா தொடங்கவுள்ளது.

News October 29, 2024

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்.30, 31, நவ.03 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயக்கப்படவிருந்த ஈரோடு- சென்னை சென்ட்ரல் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06094/06093) இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

News October 29, 2024

மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர்

image

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்  தலைமையில் சேலம் மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பனமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News October 29, 2024

நேரடி முகவர்கள் தேர்வு நேர்காணல்

image

சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் வரும் நவம்பர் 8- ம் தேதி காலை 11 மணியளவில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான நேரடி முகவர்கள் தேர்வு நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் சேலம் தலைமை தபால் நிலையம் 3-வது தளத்தில் உள்ள சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் வயது, கல்வி உள்ளிட்ட சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

News October 29, 2024

நீங்களும் REPORTER ஆகலாம்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் சேலம் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்ச்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 96558-64426 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் பண்ணுங்க.

News October 29, 2024

சேலத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

image

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி யாராவது பட்டாசு எடுத்து செல்லப்படுகிறதா? என இன்ஸ்பெக்டர்கள் சிவசெந்தில்குமார் (ரயில்வே போலீஸ்), ஸ்மித் (பாதுகாப்பு படை) ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

error: Content is protected !!