India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில்(16811) நவ.02, 03, 09, 10, 16, 17, 23, 24, 30 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து கரூர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், சேலம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16812) கரூரில் இருந்து மயிலாடுதுறை வரை மட்டும் இயக்கப்படும். ரயில் இருமார்க்கத்திலும் சேலம்- கரூர் இடையே இயக்கப்பட மாட்டாது என சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தீபாவளி கொண்டாட சொந்த ஊர் வந்தவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக முன்பதிவற்ற சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு முன்பதிவற்ற ரயில் நவ.03ஆம் தேதி காலை 7:45 மணிக்கு போத்தனூரில் புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சங்ககிரி, சேலம் வழியாக மாலை 4:50 மணிக்கு சென்னையை சென்றடையும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1866 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி சேலம் நகராட்சியாக உருவாகிய நாள் இன்று.1917 இல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நகராட்சித் தலைவராக ராஜாஜி பொறுப்பேற்றார். 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநகராட்சியாக சேலம் மாறியது. சேலம் நகராட்சி உருவாகி இன்றுடன் 158 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று சேலம் நாள் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
சேலம் மாவட்டம், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் 10.3 கோடி ரூபாய்க்கு இறைச்சி விற்பனையானது. தீபாவளி பண்டிகை என்பதால் இறைச்சி விலை அதிகரித்து உள்ளது என்று இறைச்சி வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் கடந்த 3 நாட்களில் 30,000 பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 15,000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.
சேலம் மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை இன்று (அக்.31) பொதுமக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தும் புத்தாடைகளை அணிந்தும், இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடித்தும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். புதுமண தம்பதிகள் தல தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட சேலம் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மின் கம்பங்கள் அருகில் மற்றும் மின் கம்பிகள் செல்லும் பாதையில் வெடிகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்,மின்மாற்றி அருகில் வெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்; பாதுகாப்பாக தீப ஒளி திருநாளை கொண்டாடுவோம் என்று பொதுமக்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.31) விடுமுறை தினம் என்பதால் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் கணினி முன்பதிவு மையங்கள் (PRS Centres) நாளை (அக்.31) மட்டும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி செயல்படும். அதாவது, நாளை (அக்.31) காலை 08.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை கணினி முன்பதிவு மையங்கள் செயல்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.