India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டங்களில் கோயில்கள் சார்பில் இலவச திருமணம் செய்ய 19 ஜோடிகள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜோடிகளுக்கு வரும் செப்.14- ஆம் தேதி திருமணம் நடக்கிறது. அதில் திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமக்களுக்கு ஆடை,மணமக்கள் வீட்டாரின் 20 பேருக்கு உணவு,மாலை, கட்டில்,பீரோ,மெத்தை,தலையணை, பாய் உள்ளிட்ட பொருட்கள் பொருட்கள் வழங்கப்படுகிறது.
▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
சேலம் சரகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களிடம் இருந்து ரூபாய் 79 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகள், பர்மிட் இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்கு 54 லாரிகள் உள்ளிட்ட 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வாகன தணிக்கை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்.26- ஆம் தேதி காலை 11.00 மணிக்கு சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தின் 3-ம் தளத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் குறைகள், புகார்களை நேரிலோ (அ) செப்.20- க்கு முன் கிடைக்கும்படி தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். தபால் மூலம் அனுப்பும் புகார் கவர் மீது ‘DAK ADALAT CASE’ என எழுதி முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம் -636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே <
சேலத்தில் (செப்.10) இன்று நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
▶️ எருமாபாளையம் முத்தாயம்மாள் திருமண மண்டபம் எருமாபாளையம் ▶️இடங்கணசாலை ஸ்ரீனிவாசா திருமண மண்டபம் செல்வ கணபதி நகர்
▶️ பூலாம்பட்டி கோவில்பட்டி சமுதாயக்கூடம்
▶️வீரபாண்டி சாமி ராசா ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபம் முருங்கபட்டி
▶️ தலைவாசல் குமாரசாமி திருமண மண்டபம் தலைவாசல் ▶️ஓமலூர் சுபம் திருமண மண்டபம் சரக்கு பிள்ளையூர்
சேலம் கிழக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (செப்.10) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சேலம் உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனி பகுதியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிழக்கு கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே மேம்பால பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்.11-ல் கோவை- லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (11014), எர்ணாகுளம்-டாடாநகர் தினசரி எக்ஸ்பிரஸ் (18190), ஆழப்புலா-தன்பாத் தினசரி எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் அதாவது ஈரோடு-சேலம் ரயில் பாதையில் இயக்கப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355), இராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஆகிய ரயில் சேவைகள் வரும் அக்டோபர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.09) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Sorry, no posts matched your criteria.