India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. காலை முதல் நடைபெற்ற போட்டியில் இதுவரையில் நான்கு சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்கள் உட்பட பார்வையாளர்கள் என 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன் ரூபாய் 794 கோடியைத் தாண்டியது. 88,000 விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் வரும் மார்ச் மாதத்திற்குள் ரூபாய் 1,007 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு 7% வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்படுகின்றன.
காணும் பொங்கலை முன்னிட்டு, நேற்று (ஜன.16) சேலம் மண்டல டாஸ்மாக் நிர்வாகத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை களைகட்டியது. வழக்கமாக நடக்கும் விற்பனையைக் காட்டிலும் 30% விற்பனை அதிகரித்து இருந்தது என சேலம் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை 5 நாட்கள் இயக்கப்பட்டன. அதன்மூலம் கடந்த 5 நாட்கள் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.16 கோடியே 48 லட்சம் டிக்கெட் கட்டணம் பயணிகளிடம் இருந்து வசூல் ஆகி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 8 மணி மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 2) கூலமேடு ஜல்லிக்கட்டு அமைச்சர் துவக்கி வைத்தல் 3) காலை 11 மணி மகுடஞ்சாவடி எருதாட்டம் துவக்கி வைப்பு 4)இரண்டு மணி தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில் எருதாட்டம் 5) நாலு மணி சின்ன நாகலூர் எருதாட்டம் துவக்கம்
வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 16 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து மூன்றாம் நாள் காணும் பொங்கல் தினமான இன்று (16-01-25) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போட்டியானது மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது. இதில் சிறந்த காளைக்கான முதல் பரிசான டிராக்டர், சேலத்தினை சேர்ந்த பாகுபலி காளைக்கு வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தின் பல்வேறு பகுதிகளில் எருதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆத்தூர் அருகே உள்ள செந்தாரப்பட்டியில் நடைபெற்ற எருதாட்டம் நிகழ்சியில் காளை முட்டியதில் மணிவேல்(43) என்ற தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் நடத்து சென்றபோது காளை முட்டியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் காஜா முஹைதீன் (23), அரவிந்த்(23). இவர்கள் இருவரும் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், இருவரையும் பிடிக்க நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. அதன்படி, இருவரையும் கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று (ஜன.15) கூடிய வாராந்திர ஆட்டுச்சந்தையில் 5,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 10 கிலோ எடைக்கொண்ட ரூபாய் 8,500 முதல் ரூபாய் 10,000 வரை விற்பனையானது. சுமார் ரூபாய் 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாகவும், கூடுதல் விலை கிடைத்ததாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.