India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் பட்டாக்களை<

சேலம் மேற்கு,தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர். ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல்,பெத்தநாயக்கன்பாளையம் வட்டங்களில் நத்தம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது <

கர்நாடகாவில் பிறக்கும் காவிரி ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு என்ற இடத்தில் தமிழகத்தில் நுழைகிறது. காவிரி நீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு, டெல்டா பாசன விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் திறக்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டது.இந்தநிலையில் வாய்கால் தூர்வாரததால் பெரும்பகுதி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 07- ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக இன்று (ஜூலை 05) முதல் ஜூலை 08 வரை சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று 2 விரைவு பேருந்துகளும், நாளை 2 விரைவு பேருந்துகளும் இயக்கப்படுகிறது என அதிகாரிகள் தகவல்!

சேலம் இரயில்வே கோட்டத்தில் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் ரயில்களில் விதிகளை மீறி பயணம் செய்பவர்கள் குறித்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் உள்ளிட்ட விதிகளை மீறியதாக 84,295 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.6.18 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது

சேலம், சீரங்கபாளையம் அருகே ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அஸ்தம்பட்டி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இதில், 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்தப் பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பினர். மேலும், புரோக்கர்களாகச் செயல்பட்ட விஜி மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெறவிண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் செய்யும் நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 லட்சம் வழங்குவதாகவும், மேலும் www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும்.

சேலம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் 0427 245 0241. ஷேர் பண்ணுங்க !

சேலம் மாவட்டத்தில் தேசிய நல குழுமத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 40 வயதிற்குட்பட்டோர் https://www.salem.nic.in விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர்/நிர்வாக செயலாளர், சேலம் மாவட்ட நலச்சங்கம், சேலம் – 636001 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற Para Armwresling போட்டியில், சேலம் மாவட்டத்தை சார்ந்த புஷ்பராஜ் என்பவர் கலந்து கொண்டு, 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். அவருக்கு வலுத்தூக்கும் சங்கத்தினர், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.