Salem

News February 2, 2025

லஞ்சம் வாங்கிய தாசில்தார் பணியிடை நீக்கம்

image

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தாசில்தாரைப் பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

News February 2, 2025

சேலம் வருகிறார் சௌமியா அன்புமணி!

image

சேலம் இளம்பிள்ளை கே.கே.நகரில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த கருத்தரங்கிற்கு பசுமைத்தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு பேசுகிறார். மாநில இணை செயலாளர் சத்திரிய சேகர் தலைமை தாங்குகிறார். பள்ளியின் தாளாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றுகிறார்.

News February 2, 2025

ஊர்வலம்: அதிமுகவினருக்கு அழைப்பு

image

அண்ணா நினைவுநாளை முன்னிட்டு, சேலம் தெற்கு எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலம் நாளை (பிப்.03) காலை 9.30 மணியளவில் நடக்கிறது. இந்த ஊர்வலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலையைச் சென்றடைகிறது. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஊர்வலத்தில் அதிமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என அதிமுக மாநகர், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டறிக்கை.

News February 2, 2025

சேலத்தில் தவாக பொதுக்குழு: வேல்முருகன் பங்கேற்பு

image

சேலம் சூரமங்கலம் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட பொது குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று சேலம் வந்தார். அவரை மத்திய மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வின் போது நிர்வாகிகள் யுவராஜ், மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் இருந்தனர். பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

News February 2, 2025

சேலம் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் இன்றைய (பிப்ரவரி 2) முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 9 மணி தமிழக வெற்றி கழகம் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா நல உதவிகள் வழங்கல். 2) காலை 10 மணி தமிழ்நாடு வெள்ளி வியாபாரிகள் நல சங்க விழா சிவதாபுரம். 3) காலை 10 மணி மாமாங்கம் அருகே தனியார் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் துவக்க விழா. 4) மாலை 5:30 மணி மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் நூல் வெளியீட்டு விழா வாசவி மஹால்

News February 2, 2025

சேலம் வடமேற்கு மாவட்ட தவெக செயலாளர் நியமனம்!

image

தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் வடமேற்கு (சங்ககிரி தொகுதி, ஓமலூர் தொகுதி) மாவட்ட செயலாளராக K. செந்தில்குமார் என்பவரை, அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். மேலும், இணை செயலாளராக R.இளம்பரிதி, பொருளாளராக M.பெருமாள் மற்றும் துனைச் செயலாளர்களாக P.ராகுல் காந்தி, P.சியாமளாதேவி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 2, 2025

நாய் கடியில் சேலம் மாவட்டம் முதலிடம்

image

2024- ஆம் ஆண்டில் தமிழகத்தில் அதிகம் நாய் கடியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில், சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சேலத்தில் சுமார் 37,011 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தஞ்சையில் 24,038 பேரும், திருச்சியில் 23,978 பேரும் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News February 1, 2025

கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

image

சேலம் மாநகர பகுதியான அழகாபுரத்தில் இருந்து ஐந்து ரோடு செல்லும் சாலையில் இன்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கடும் அவதியடைந்தனர். முகூர்த்தங்கள் என்பதால் கடும் போக்குவரத்து என்று கூறப்படுகிறது.

News February 1, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு

image

கோவை- சோரனூர் பயணியர் ரயில் (56603) நாளை (பிப்.02) மாலை 04.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாலக்காடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்; பாலக்காடு- சோரனூர் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பாலக்காட்டில் இருந்து சோரனுக்கு இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 1, 2025

சேலம்: தினமும் தொடரும் தற்கொலைகள்

image

சேலம அரசு மருத்துமனையில் மயங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அம்மாபேட்டை காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெரிய கிணறு பகுதியை சேர்ந்த தறி தொழிலாளி தியாகு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், காப்பாற்ற முயற்சியின் போது உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!