India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், நாளை மாவட்ட கள ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன் வெங்கடாசலம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். மேலும், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் கலந்து கொள்வதாக சேலம் அதிமுக சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (நவம்பர் 28) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டது.
சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் இன்று (நவ.28) டெல்லியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நேரில் சந்தித்து, சுற்றுலாத்துறை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் நாளை(28.11.24) புத்தக கண்காட்சி துவங்க உள்ளது. இந்த கண்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பேஸ்புக் இன்ஸ்டாகிராம் யூடியூப் எக்ஸ்தளம் போன்ற சமூக வலைதளங்களில் காண மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கியூ ஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஸ்கேன் செய்து தினந்தோறும் புத்தக கண்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை காணலாம்.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் (30.11.2024) மற்றும் (1.12.2024) ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்!
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் ‘சேலம் புத்தகத் திருவிழா 2024’ நாளை (நவ.29) தொடங்கி, வரும் டிசம்பர் 09 வரை நடைபெறவுள்ளது. வாசகர்களைக் கவரும் வகையில் புத்தகத் திருவிழாவின் நுழைவுவாயில் புத்தகங்கள் தோற்றத்தில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
நாளை (நவ.29) சேலம் புத்தகத் திருவிழா 2024 தொடங்கவுள்ள நிலையில், இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் இதோ- பிரேசில் நாட்டை தாயகமாக கொண்டுள்ள Princess Flower என்ற இம்மலர் Oval வடிவ இலைகளுடன் கரும் பச்சை நிறத்தில் வெல்வெட் அமைப்புடன் புகழ்மிக்க மலர்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. மலை பிரதேசங்களில் மட்டும் காணப்படும் அரிய வகை Princess Flower சேலம், ஏற்காட்டின் சிறப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் குறித்து பேசியதாகக் கூறி தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் எம்.எல்.ஏ. உள்பட 110 பா.ம.க.வினர் மீது சேலம் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் பதவியில் இருந்து புவனேஸ்வரனை விடுவித்து மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக அம்மாப்பேட்டை மண்டல உதவி ஆணையாளர் வேடியப்பன், கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (நவ.28) முதல் டிச.07 வரை அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நடைபெறவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு அலுவலர்கள், பணியாளர்களுக்கு இணைப்பதிவாளர் அருளரசு அறிவுரை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.