India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக மாநகர காவல் துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி நடைபெறுகிறது. இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மாநகரப் பகுதி முழுவதும் இன்று ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் தொடர்ந்து, விபத்து, கொலை, போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றன .குற்ற நடைபெறாமல் இருக்க சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பூசணிக்காய் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டதாக வீடியோ வைரல் வைரலானது. ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரனை, சேலம் ஆயுதப்படைக்கு தற்காலிக பணியிடம் மாற்றம் செய்து சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம்கோயல் நேற்று உத்தரவிட்டார்.
சேலம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளான பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டுமென பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் இலவச திறன் வளர்ப்பு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான தேர்வு முகாம், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும் டிசம்பர் 04-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கவுள்ளது. இதில் தேர்வுச் செய்யப்படுவோருக்கு இலவசமாக சீருடை, உணவு, தங்குமிட வசதி ஆகியவை தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், மேட்டூர் அணைக்கு, இன்று காலை நிலவரப்படி, வரும் நீரின் அளவு வினாடிக்கு 4528 கன அடியிலிருந்து வினாடிக்கு 5195 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை, மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவனம், இரண்டாவது நாளாக இன்றும் (டிச.01) சேலம்- சென்னை, சென்னை- சேலம் இடையேயான விமான சேவைகளை ரத்துச் செய்துள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/check-flight-status.html என்ற இணையதளத்தை அணுகலாம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கள்ள நத்தம் முட்டல் பகுதியில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்துறையினர் நீர்வீழ்ச்சி மற்றும் பூங்காவை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளது. இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சேலத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 4ஆவது நாளான இன்று எழுத்தாளர் மோசஸ் எழுதிய இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் வாழ்க்கை சரித்திர நூலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி அனுசியா வெளியிடுகிறார். இதில்மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி பெற்றுக் கொள்கிறார். மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் நலத்துறை மூலம் 10-ம் வகுப்பு முதல், முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்த பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு பயிற்சிக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, டிச.3-ல் காலை 10 மணிக்கு, அயோத்தியாப்பட்டணம் கஸ்தூரிபாய் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. இதில் பழங்குடியின இளைஞர்கள் கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் டிச.1ஆம் தேதி இன்று முக்கிய நிகழ்வுகள். 1)காலை மணி எருமாபாளையம் ராமானுஜர் மணி மண்டபம் விழா. 2) காலை ஓய்வு பெற்ற பெற்ற பேரூராட்சி பொதுக்குழு கூட்டம் ஏவிஆர் மண்டபத்தில் காலை 10 மணி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தசை சிதைவு நோய் விழிப்புணர்வு காலை விழிப்புணர்வு. 3)காலை புதிய பேருந்து நிலையத்தில் எய்ட்ஸ் தின விழா. 4) சேலத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.