India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் தனியார் கல்லூரி அருகே உள்ள பம்பிங் பிரதான குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பராமரிப்பு பணி வரும் 21, 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த இரு நாட்களுடம், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். Share பண்ணுங்க மக்களே
சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா முதல்நிலை போட்டி தேர்வு (21.12.2024) அன்று சேலம்-8, அரசு மகளிர் கலைக் கல்லூரி கூட்ட அரங்கில், பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. கலந்துகொள்ள விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ என்ற விருதுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் இருந்து 8 பேர் தேர்வுச் செய்யப்பட்டனர். சேலம் ரயில்வே கோட்டத்தின் முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா உள்ளிட்ட அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். டிச.21ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள ரயில்வே வார விழாவில் விருது வழங்கப்படுகிறது.
சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாநகரில் பொது இடங்களில் அரசியல் கட்சி கூட்டம் நடத்தவும், சங்க கூட்டங்கள் நடத்தவும் ஆர்ப்பாட்டங்கள், பேரணி நடத்தவும், 5 நாட்கள் முன்னதாகவே அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். திருமணம், இறுதி ஊர்வலம் போன்றவற்றிற்கு இது பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிரவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான (டிச 18) இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 18ஆம் தேதிக்கான அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் சார்பாக அருகில் 1100 மில்லி மீட்டர் பம்பிங் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் பராமரிப்பு பணிகள் மாநகராட்சியின் நடைபெற்று வருகிறதஇதன் காரணமாக வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்கள் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சில் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தானம், அனைத்து மாநிலங்களுக்கான சுற்றுலா,பிற துறைகளுக்கான SED டிக்கெட்டுகள் வழங்குவதை ரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில், நெல்லூரில் ஆந்திர அமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டியை நேற்று நேரில் சந்தித்த சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏவும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன், சீக்கிர தரிசன டிக்கெட்டுகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யுமாறு மனுவை வழங்கினார்.
சேலம் மேற்கு கோட்ட அளவில் அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் வரும் டிச.27- ஆம் தேதி மதியம் 02.30 மணிக்கு கோட்ட அலுவலகத்தில் நடக்க உள்ளது. வாடிக்கையாளர்கள் புகாரை, ‘அஞ்சல் கண்காணிப்பாளர், மேற்கு கோட்டம், சேலம் – 636005’ என்ற முகவரிக்கு வரும் டிச.25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்டத் தொகுதியின் பொறுப்பாளர் தாமோதரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருடன் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 15 பேர் விலகி உள்ளனர். சேலத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.