Salem

News February 15, 2026

சேலம் அருகே சீறிப்பாய்ந்த காளைகள்

image

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, சேலம் அருகே உள்ள நிலவாரப்பட்டியில் இன்று தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு திருவிழாவைச் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து துள்ளி வரும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்கினர். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

News February 15, 2026

சேலம்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 15, 2026

சேலம் அருகே விபத்து! 10 பேர் காயம்

image

தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் ஒரு வேனில் கொல்லிமலைக்குச் சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேனானது தம்மம்பட்டி அடுத்துள்ள சேரடி – வேலிக்காடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தின் பிரேக் செயலிழந்து விபத்தில் சிக்கியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News February 15, 2026

சேலம்: கலைஞர் கனவு இல்லம் பெறுவது எப்படி?

image

1. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. சொந்தமாக பட்டா நிலம் இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம்).
3. ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ.3.50 லட்சம் அரசு வழங்குகிறது.
4. விண்ணப்பிக்க, உங்கள் பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO)அணுகி அனுகவும்.
5. வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க

News February 15, 2026

ஏற்காட்டில் மர்ம மரணம்

image

சேலம் மாவட்டம் ஏற்காடு, நூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தவர் சுரேஷ்சுரேஷ் தான் வேலை செய்த விடுதி அறையிலேயே உயிரிழந்து கிடப்பதாக ஏற்காடு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்டமாக வலிப்பு வந்து கீழே விழுந்த போது தலையில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது.

News February 15, 2026

சேலத்தில் வசமாக சிக்கிய பெண்

image

துறையூரை சேர்ந்த சுகன்யாவிற்கு கடந்த 11-ம் தேதி திருச்சி GH-ல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சுகன்யாவிற்கு உதவி செய்வது போல் பெண் நடித்து, அக்குழந்தையை கடத்திச் சென்றார். இதுகுறித்த புகாரின் பெயரில், போலீசார் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பதும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் கடத்தி செல்ல முடிவெடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

News February 15, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!