India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்றைய அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜன.04 முதல் ஜூன் 28 வரை சனிக்கிழமைதோறும் ஹூப்ளியில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், ஜன.05 முதல் ஜூன் 29 வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் ராமேஸ்வரத்தில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில்கள் (07355/ 07356) இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும். நாமக்கல், கரூர், திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சேலம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்யாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் வரும் டிச.23ஆம் தேதி காலை 10.00 மணியளவில் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரிகளைத் தேக்கும் பங்கர் டேங்க் திடீரென சரிந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டு, பணிகளைத் துரிதப்படுத்தினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ள அனல்மின் நிலையத்தில் பங்கர் டேங்க் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் நிலக்கரி குவியலில் புதைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், சேலத்தைச் சேர்ந்தவருமான நடராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘அஸ்வின் அண்ணா வாழ்த்துகள், கிரிக்கெட்டுக்கு உங்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அனல்மின் நிலையத்தில் நேரிட்ட விபத்தல் 2 பேர் மாயமாகியுள்ளனர். இதில் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறையின் சார்பில் 18 மாவட்டத்தில் உயர்மட்ட பாலம் கட்ட CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சேலத்தில் வில்வனூர் மாயவன் கோவில் சாலை வசிஸ்டர் ஆற்றில் புதிய பாலம். துலுக்கானூரில் வசிஸ்டர் ஆற்றில் புதிய பாலம், வேப்படி பாலக்காடு சாலையில் புதிய பாலம், அயோத்தியாபட்டினம், திருமணிமுத்தூரில் பாலம், இடையாப்பட்டியில் பாலம், வைத்திய கவுண்டன் புதூர் ஏத்தாப்பூர் வசிஸ்டர் ஆற்றில் பாலம் அமைகிறது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வரும் டிச.22ல் வாழப்பாடியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் www.salemsportswing.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொது நூலக துறையின் சார்பில் குமரியில் வள்ளுவர் சிலை அமைத்து வெள்ளிவிழா ஆண்டு விழாவை ஒட்டி, சேலம் மாவட்ட பொது நூலகத்தில், வருகின்ற 26ஆம்,தேதி காலை 10:30 மணிக்கு, பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்குபெற விரும்புவோர் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள், தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு, நூலகத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.