Salem

News April 28, 2024

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மையத்தில் ஆய்வு

image

சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன்
வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள்
உள்ளிட்ட இம்மையத்தின் அனைத்து பகுதிகளும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனை சேலம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 28, 2024

சேலம் கோட்டத்தில் ரயிலில் சிக்கி 126 பேர் பலி

image

சேலம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 மாதத்தில் 126 பேர் ரயில் சிக்கி பலியாகி உள்ளனர். சேலத்தில் 40 பேர், ஜோலார்பேட்டையில் 46 பேர், காட்பாடியில் 30 பேர், ஓசூரில் மற்றும் தர்மபுரியில் தலா 5 என மொத்தம் 126 பேர் ரயிலில் சிக்கி இறந்துள்ளனர் என்று சேலம் தெற்கு ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

வெப்ப அலை வீச வாய்ப்பு

image

சேலம் உட்பட 14 மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

News April 28, 2024

சேலம் மக்களே “யாரும் வெளியே வராதீங்க”  

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை வரும் வாரம் மேலும் தீவிரமாகும் என்பதால், முதியவர்கள், கர்ப்பிணிகள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தனியார் வானிலை ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார்.  

News April 27, 2024

சேலத்தில் கடும் வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்-27) மாவட்டத்தில் அதிகபட்சமாக 107.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News April 27, 2024

கடும் வெயில்: பெற்றோர்களின் கவனத்திற்கு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகளை பெற்றோர்கள் கவனமுடன் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்றும். வெயில் நேரங்களில் குழந்தைகள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

News April 27, 2024

சேலம் அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

image

சேலம் மாவட்டம் மேச்சேரி, பொட்டனேரி அடுத்த ஆரியன்காட்டுவளவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குஞ்சுபையன்(55). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று(ஏப்.26) காலை 10:00 மணிக்கு குஞ்சு பையன், பொட்டனேரியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றபோது சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேட்டூர் தீயணைப்பு குழுவினர், அவரது சடலத்தை மீட்டனர். சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 27, 2024

சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

சேலத்தில் நேற்று (ஏப்.26) 106.7 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று சேலம் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் சேலம் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

மான் கறி பங்கிட்ட 8 பேர் கைது; ரூ.1.50 லட்சம் பறிமுதல்

image

வாழப்பாடி அருகே தும்பல்வனச்சரகம் , பெலாப்பாடி காப்புக்காடு ஒட்டியுள்ள ஓடைப் பகுதியில் நாய்களால் புள்ளிமான் ஒன்று துரத்தி வரப்பட்டுள்ளது. இதனை அறுத்து கறியை பங்கிட்டுக்கொள்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று மான் கறி வைத்திருந்த பெரியசாமி, மாயவன் உட்பட 8 பேரை பிடித்து ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News April 26, 2024

சேலம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மே முதல் வாரத்தில் வெப்ப அலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேசமயம் மே 5ம் தேதி முதல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதன்படி, ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற உள்மாவட்டங்களில் மே முதல் வார இறுதியில் இருந்து இரண்டாவது வாரம் வரை மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.