India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடப்பாண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரை மட்டும் 22,157 பேருக்கு பெரிய அளவிலான அறுவைச் சிகிச்சைகளும், 44,560 பேருக்கு சாதாரண அறுவைச் சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தேவி மீனாள் தெரிவித்துள்ளார். ஏராளமானோர் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் அறுவைச் சிகிச்சை பெற்று வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 2, மேச்சேரி மற்றும் சேலம் தலா 1 என மொத்தம் 4 தனியார் பள்ளிகள் நேற்று முன்தினம் (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில் செயல்பட்டதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) இஸ்மாயில், அந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சேலம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. சேலத்தில் மழையின் தாக்கம் குறைந்து, மிகக் குறைந்த அளவு பல பகுதியில் மழை இன்றியும் காணப்படுகிறது. தம்மம்பட்டியில் அதிகபட்சமாக 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிலப்பகுதியில் மழை இன்றி பதிவாகியுள்ளது.
“கபீர் புரஸ்கார் விருது” பெற சேலம் மாவட்டத்தில் தகுதியான நபர்கள் வருகின்ற 15/12/2024-க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சேலம் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இந்த விருது குடியரசுத் தினத்தன்று வழங்கப்படவிருக்கிறது.
சேலத்தில் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (ம) பெண்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்றசெயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். குழந்தைகள் உதவி மைய எண் 1098 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம், இதைக் கண்காணிக்க காவல்துறை, மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், தன்னார் தொண்டு நிறுவனங்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணங்கள் குறித்து கடந்த நவம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் 27 அழைப்புகள் வந்ததாகவும், அதில் ஆறு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்தார். மேலும் 20 புகார்கள் தவறு என்றும் மீதமுள்ள ஏழு வெளிமாவட்டத்தை சேர்ந்தது என்றும் தெரிவித்தார். புகார் மீது உடனடி எடுக்கப்படும் என்றும், எந்த விதமான பாரபட்சம் பார்க்கப் படுவதில்லை என்றும் தெரிவித்தார்.
அகில இந்திய அளவிலான கடிதப் போட்டியை நடத்த இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. ‘எழுதுவதில் ஒரு மகிழ்ச்சி- டிஜிட்டல் யுகத்தில் கடிதத்தின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் கடிதப்போட்டி வரும் டிச.14 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வரும் டிச.15- ம் தேதி காலை 9 மணிக்கு கொங்கணாபுரம் வின்னர் விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடக்க உள்ளது. திராவிட இயக்க கொள்கைகளில் பற்று, ஆர்வம் கொண்ட 18 முதல் 35 வயதுள்ளவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம் என திமுக-வின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.