India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் எம்.பி செல்வகணபதி, மன்மோகன் சிங் மறைவையொட்டி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக தான் இருந்தபோது 13வது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிதித்துறையின் நிலைக்குழுவில் முனைவர் மன்மோகன் சிங்கும், தானும் உறுப்பினர்களாக பணியாற்றியது நெஞ்சில் நிற்கிறது. அந்நாட்கள் தன் வாழ்நாளின் என்றும் மறவாமல் நிலைத்து நிற்கும், உங்களை இழந்து நிற்கும் இவ்வேளையில் நினைவு கூறுகிறேன்.
சேலம் இன்றைய (டிச.26) முக்கிய நிகழ்வுகள்: 1)காலை 10 அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. 2)காலை 11மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம். 3) மதியம் 1 குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. 4) மதியம் 2 எரிவாயு நுகர்வோர் மாதாந்திர குறைதீர்க்க கூட்டம். 5) மாலை 4 பாரதிய ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.
தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் அனைவருக்கும் என் இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் சார்பில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி வருகின்ற 28.12.2024 முதல் 11.1.2025 வரை, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நடைபெறுவதாகவும், இதனை அமைச்சர் காந்தி, அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைக்கிறார். கைத்தறி ஜவுளி ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சேலம் வழியாக வரும் டிச.27, 28, 31, ஜன.01, 04, 05, 06 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பெங்களூரு கண்டோன்மென்ட்- கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20641) தாமதமாக புறப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான நேரத்திலே வந்தே பாரத் ரயில் புறப்பட்டுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை கால சீசனை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, நாளை (டிச.27) பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நார்த்துக்கும், மறுமார்க்கத்தில், டிச.28- ல் திருவனந்தபுரம் நார்த்தில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் (06569/06570) இயக்கப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்; ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (டிச 26) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (26-ம் தேதி) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக, டிச.27-ல் பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும், மறுமார்க்கத்தில், டிச.28-ல் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் (06569/06570) இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும். சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், வரும் டிச.27-ம் தேதி காலை 11.30 மணிக்கு, ஆட்சியர் அலுவலக அறை எண்.115, மகிழம் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு கண்டு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.