India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக வீட்டுமனை பெறலாம்.இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று (ஆக.27) சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் BBK Boys குழு சார்பில் Save animals என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான விநாயகர் சிலை, பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. விநாயகர் சிலைக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சேலம் சரகத்தில் 4,995 பள்ளிகளைச் சேர்ந்த 3.46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு வழிவகுத்துள்ளதாக கல்வியாளர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 1,501 பள்ளிகளில் 98,144 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

சேலம் மக்களே 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? தமிழ்நாட்டில் ரயில்வேயில் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு அமைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 பயிற்சி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.6,000 (10th), ரூ.7,000 (12th, ITI) உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமத்தில் சுமார் மூன்றரை ஏக்கரில் திரைப்பட நடிகர் சரவணன் கட்டியுள்ள பிரம்மாண்டமான அனைத்து வசதிகளுடன் கூடிய சினிமா ஸ்டூடியோவை நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் இன்று (ஆக.27) ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர். விழாவில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமத்தில் சுமார் மூன்றரை ஏக்கரில் திரைப்பட நடிகர் சரவணன் கட்டியுள்ள பிரம்மாண்டமான அனைத்து வசதிகளுடன் கூடிய சினிமா ஸ்டூடியோவை நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் இன்று (ஆக.27) ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர். விழாவில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

சேலம் ஆகஸ்ட் 28 வியாழக்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள்
▶️ துட்டபட்டி வெள்ளையன் மஹால் அருகில் துட்டப்பட்டி மேல்நிலைப்பள்ளி
▶️ ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை
▶️ தேவூர் அன்னம்மாள் கல்யாண மண்டபம் கனியாள்பட்டி
▶️ ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஏற்காடு ▶️தலைவாசல் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் காட்டுக்கோட்டை
▶️மேச்சேரி மல்லிகார்ஜுனா திருக்கோவில். இதனை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தமிழ்நாடு முழுவதும் உள்ள சர்க்கிள் போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டு இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சேலம் மாநகரில் ஏழு இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கையை எடுத்து வருவதாகவும், இதற்கான பட்டியலை உளவு பிரிவு மூலம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு புகார்களுக்கு ஆளானவர்கள் மாற்ற திட்டம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது!

சேலம் மாவட்ட தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வீடியோ ஒளிப்பதிவு மற்றும் ஆடியோ வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 30 வயது வரை உள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியி முடிவில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும் என சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி தெரிவிக்த்துள்ளார். (இதனை ஷேர் பண்ணுங்க)

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக வரும் ஆக.30- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கு சிறப்பு ரயில் (06125) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.