India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் வீரக்கல் பகுதியை சேர்ந்த மாலதி என்னும் பெண் தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை கண்ட காவலர்கள், பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தபோது, “தனது தெருவில் நடக்கும் சமூக விரோத செயலை தனது கணவர் தட்டிக் கேட்டதாகவும், இதனால் அவர் மீது பொய் வழக்கு போட்டு தங்களை காவல்துறை தொந்தரவு செய்வதாகவும்” தெரிவித்துள்ளார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த குறைதீர் கூட்டத்தில் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர். அதன்படி மாற்றுத்திறனாளிகள், கலெக்டரிடம் மனு அளிக்க கூடியிருந்த இடத்திற்கு நேரடியாக சென்று மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். அந்தக் குறைகளை உடனடியாக தீர்த்து வைக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினசரி ரூபாய் 3 கோடி முதல் ரூபாய் 4 கோடி அளவில் மதுபானங்கள் விற்பனையாகிறது. இந்த நிலையில் வரும் புதன்கிழமை புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 30% மதுபானங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் 1,715 ரேஷன் கடைகள் மூலம் சுமார் 10.71 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் வீடுதோறும் வரும் ஜன.09 முதல் தொடங்குகிறது. இதற்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை ஆகியவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி விரைவில் தொடங்குகிறது.
சேலம் (டிச.30) இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்: 1) காலை 6:00 மணி அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆஞ்சநேயர் ஜெயந்தி பூஜைகள். 2) காலை 10 மணி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைகள் கூட்டம். 3) காலை 10 மணி கோட்டை மைதானத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம். 4) காலை 11 மணி கோட்டை மைதானத்தில் விடுதலை முன்னணி தோழமை சங்கங்கள் ஆர்ப்பாட்டம். 5)12 மணி தமிழ் மாநில விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம், வீரபாண்டி முன்சீப் தோட்டம் பகுதியில் வசிக்கும் பெரியசாமி. இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இவருக்கு ஜெகதாம்பாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஜெகதாம்பாள் வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்த கணவர் பெரியசாமி இறந்த மனைவியை பார்த்து கொண்டு இருந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (29-ம் தேதி) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (டிச 29) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராஜர் நினைவு அரசினர் பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர் அன்பரசி இணைந்து, குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு போற்றும் வகையில், 9ஆம் நூற்றாண்டு சோழர் கால தமிழ் எழுத்தில், 1330 திருக்குறளில் தஞ்சை பெரிய கோவில் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளனர்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருந்து கடைகள் என 3,000க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்தாண்டில் இதுவரை விதிகளை மீறி செயல்பட்ட 38 மருந்துக் கடைகளின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.