India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும்அசம்பாவிதங்களை தவிர்க்கவும் சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறைஉட்கோட்டத்திற்குட்பட்டசேலம் ஊரகம்,சங்ககிரி,ஆத்தூர்,ஓமலூர்,மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில்காவல் |அதிகாரிகள்ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 19-1-2025 இரவுரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வாழப்பாடி அருகே உள்ள சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் ஸ்டேடியத்தில் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. வரும் ஜன.23- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு-சண்டிகர் அணிகள் மோதுகின்றன. ஜன.23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் சேலத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டி முதன் முறையாக ஜியோ சினிமாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
சேலம் சாமிநாதபுரத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (ஜன.19) திரைப்பட நடிகர் தாடி பாலாஜி தனது மகளோடு சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடிகருக்கு மாரியம்மன் சுவாமி புகைப்படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது. நடிகருடன் கோயிலில் இருந்த பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடக்கிறது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் பாகுபலி காளை முதல் பரிசை பெற்றது. சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேல் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றன. எனவே மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோல் சேலத்திலும் வாடிவாசல் அமைத்து நடத்த வேண்டும் என சேலம் பாகுபலி காளையை வளர்த்த மோகன்ராஜ், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சேலம் அம்மாப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த அழகேசன் (40) திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான நிலையில் அம்மாபேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். அதேபோல், சேலம் அழகாபுரம் ஸ்வர்ணபுரி பகுதியைச் சேர்ந்த பிலால் (36) ஜாமீனில் வெளியே வந்து 2 மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவின் பேரில் அழகாபுரம் போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
பொங்கல் முடிந்து முக்கிய நகரங்களுக்கு திரும்ப இன்றைய ரயில் பயணத்திற்கான தட்கல் டிக்கெட் புக்கிங் தொடங்கிய 2 நிமிடத்தில் முடிந்தது. பெரும்பாலான பயணிகளுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. சேலம் ரயில்வே கோட்ட கணினி முன்பதிவு மையத்திலும் தட்கல் பதிவுக்கு ஏராளமானோர் காத்திருந்தனர். ஆனாலும் பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் உள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் இன்று (ஜன.19) மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை அர்ச்சகர்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்று கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பொங்கல் விடுமுறை நிறைவடைந்ததையொட்டி, தென்மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் மற்றும் நெல்லையில் இருந்து சேலத்திற்கு ரூபாய் 3,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ரூபாய் 800 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு பக்தர்கள் குளிக்க 7 கிணறுகள் உள்ளன. அங்கு குளிக்கும் பெண்கள் உடை மாற்ற அறை இல்லை. காரில் வரும் பெண்கள், கிணற்றில் குளித்துவிட்டு காரில் சென்று உடை மாற்றுகின்றனர். மற்றவர்கள், உடை மாற்ற சிரமப்படுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரக்கோணம்- சேலம் மெமு ரயிலின் பெட்டிகள் கும்பமேளாவுக்காக உ.பி.க்கு அனுப்பப்பட்டுள்ளதால் நாள்தோறும் இருமார்க்கத்திலும் இயக்கப்படும் அரக்கோணம்- சேலம் மெமு ரயில் சேவைகள் (16087/16088) நேற்று முதல் மறுஉத்தரவு வரும் வரை ரத்துச் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சோளிங்கர், வாலாஜா,காட்பாடி, குடியாத்தம்,ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் சென்றது.
Sorry, no posts matched your criteria.