Salem

News January 12, 2025

அதிபயங்கர விலையில் மல்லிகைப்பூ

image

சேலம் வ உ சி பூ மார்க்கெட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அனைத்து பூக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது சீசன் இல்லாமையாலும் பொங்கல் பண்டிகை ஒட்டியும் குண்டு மல்லிகைப் பூவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 4000 வீதம் விற்கப்பட்டு வருகிறது. மஞ்சள் சாமந்தி கிலோ ரூ.400, கலர் பட்டு ரோசாக்கள் கிலோ ரூ.500 என விற்பனை செய்யப்படுகின்றன.

News January 12, 2025

செல்போன் பேசியபடி சென்ற முதியவர் லாரி மோதி பலி

image

சேலம் அரிசி பாளையத்தை சேர்ந்த கணேசன் எனும் காவலாளி நேற்று இரவு அம்மாபேட்டை மிலிட்டரி சாலை அருகே செல்போன் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே மணலோடு ஏற்றி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 12, 2025

நாதக கொள்கை பரப்பு செயலாளர் விலகல்

image

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக அழகரசன் என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில், நிர்வாகிகளின் மனோநிலைக்கு எதிராக சீமான் செயல்படுவதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு வெளியேறினர். குறிப்பாக, வணிகர் அணி செயலாளர் வசந்தகுமார் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன் ஓமலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் விலகுவதாக அறிவித்தனர்.

News January 12, 2025

ஊரக உள்ளாட்சிகளுக்கான தனி அலுவலர்கள் நியமனம்

image

சேலம் மாவட்டத்தைப் பொறுத்த வரை 20 ஊராட்சி ஒன்றியங்களில் 385 கிராம ஊராட்சிகள் உள்ளன. சேலம் மாவட்டத்தில் 4,299 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜன.05ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து ஊரக வளர்ச்சி துணை ஆணையர் பொன்னையா தனி அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஊரக உள்ளாட்சிகளுக்கான தனி அலுவலர்கள் பொதுவான அறிவுரைகளைப் பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 12, 2025

சேலம் கோட்டத்துக்கு ரூ.237 கோடி வருவாய்

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், கரூர் ரயில் நிலையங்களில் பார்சல்கள் ஏற்றப்படுகின்றன. கடந்த 2024-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் 237 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. 2023- ஆம் ஆண்டை விட வருவாய் 9.28% அதிகம் ஆகும். 

News January 12, 2025

ஜன.21-இல் வாகனம் ஏலம்

image

சேலம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு சார்பில் ரேஷன் பொருட்களைக் கடத்த பயன்படுத்திய 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதன் உரிமையாளர்கள், அபராதம் செலுத்தி பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனால் அந்த வாகனங்கள், சர்க்கார் கொல்லப்பட்டி மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள துறை அலுவலகத்தில் ஜன.21-இல் ஏலம் விடப்படும். வாகனங்களை பார்வையிட 88380-00452 என்ற எண்ணை அழைக்கலாம்.

News January 12, 2025

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்று(12.1.25) முக்கிய நிகழ்வுகள். 1) காலை 9.30 மணிக்கு சுவாமி விவேகானந்தா பிறந்த நாளை ஒட்டி பாஜகவினர் கொண்டாட்டம். 2) காலை 10 மணி சேலம் மாநகர காவல் துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம். 3) 11 மணிக்கு ராஜன் நற்பணி மன்றம் சார்பில் சேர் நாயக்கர் பட்டி பகுதியில் முதியவர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

News January 12, 2025

சேலத்தில் சிறப்பு நீதிமன்றம்: CM

image

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்காக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை அறிவித்து உள்ளார்.

News January 11, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.11) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது

News January 11, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.11) இரவு ரோந்து காவலர்கள் விபரங்கள் வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!