Salem

News January 21, 2025

மாவட்ட காவல் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 21 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்

News January 21, 2025

சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாச்சாரம்?

image

சேலம் மாநகரத்தில் மெடிக்கல்களில் விற்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாத்திரைகளை விற்பதற்காகவே ஒரு நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது என கூறப்படுகிறது. இந்த கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

வாகன தணிக்கையில் சுணக்கம்: 10 போலீசார் இடமாற்றம்

image

சேலம் மாவட்ட காவல்துறையினர் வாகன தணிக்கையில் உரிய முறையில் ஈடுபடுவது இல்லை என தொடர்ந்து வந்த புகார் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அவரின் ஏற்பாட்டின்படி மாற்றுடையில் வாகனத்தில் போலீசார் மேற்கொண்ட ரகசிய பயணத்தில் ஆறு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 காவலர்கள் முறையாக செயல்படாதது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நேற்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

News January 21, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு

image

இன்று (ஜன.21), ஜன.28 ஆகிய தேதிகளில் ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் (56108) ஈரோடு முதல் திருப்பத்தூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56109) திருப்பத்தூர் முதல் ஈரோடு வரையிலும் இயக்கப்படும்; இந்த ரயில்கள் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

News January 21, 2025

அரசு மருத்துவமனை உணவகங்களில் திடீர் சோதனை

image

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் விற்பனைக்காக வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பை கப்புகள் பறிமுதல்செய்து அழித்தனர். இந்நிலை தொடரும்பட்சத்தில் உரிமம் ரத்துசெய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்தனர்.

News January 21, 2025

இபிஎஸ் கட்சியினருக்கு வேண்டுகோள்

image

“பூத் கமிட்டி, கிளை நிர்வாகிகள் 100% அர்ப்பணிப்போடு தேர்தல் பணியாற்ற வேண்டும். கடந்த தேர்தலில் மிகக் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் நாம் தோல்வியுற்றோம். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மிக எழுச்சியோடு கொண்டாட வேண்டும்” என சேலம் ஓமலூரில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

News January 21, 2025

சேலத்தில் வேலைவாய்ப்பு முகாம்!

image

சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வருகிற 24ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8 ஆம் வகுப்பு முதல் அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதில் விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

சேலத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

சேலம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல், மாலை 4 வரை அம்மாபேட்டை, சீலியம்பட்டி, சூரமங்கலம், அரசநத்தம், கருப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும், டவுன் ஜலகண்டாபுரம், சின்னப்பம்பட்டி, மேட்டூர் டவுன், சேலம் கேம்ப், நங்கவள்ளி, மேச்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2025

மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறைஉட்கோட்டத்திற்குட்பட்டசேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில்காவல் அதிகாரிகள்ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News January 20, 2025

சேலம் மாநகர காவல் இரவு பணி விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி.20 இரவு அதிகாரிகள் விவரம். 

error: Content is protected !!