Salem

News January 18, 2025

பண்ணை வீடுகள், தனியாக உள்ள வீடுகள் கணக்கெடுப்பு

image

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் பண்ணை வீடுகள் மற்றும் தனியாக உள்ள வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அந்த வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா, செல்லும் வழிகள் எங்கெங்கு பொருத்தப்பட்டுள்ளது, முக்கியமாக எங்கெங்கு பொருத்தப்பட வேண்டியுள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News January 18, 2025

மாநகர காவல் ஆணையாளரின் அறிவிப்பு 

image

சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை ஜனவரி 18 தேதியிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதி நள்ளிரவு வரை சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள், பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த, 5 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட கால அவகாசத்தில் பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். 

News January 17, 2025

ஜல்லிக்கட்டை பனை மரத்தில் ஏறிப்பார்த்த நபர் 

image

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் இன்று (ஜன.17) நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை, பனை மரத்தில் எரிப்பார்த்த பார்வையாளரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விழாக்குழுவினர் அந்த நபரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அந்த நபரை மரத்தில் இருந்து கீழே இறக்கி எச்சரித்து அனுப்பினர்.

News January 17, 2025

ரயில் நிலையத்தில் பிரசவித்த பெண்

image

சேலம் ரயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து, வேலூருக்கு செல்வதற்காக ரயிலில் பயணம் செய்த வேலூரைச் சேர்ந்த லைலா என்ற கர்ப்பிணிப் பெண்மணிக்கு, நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டதில், ஐந்தாவது பிளாட்பாரத்தில் , ரயில்வே மருத்துவர் மற்றும் 108 மருத்துவ பணியாளர்களால், பிரசவம் பார்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் வேலூருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

News January 17, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் சேலம் மாவட்ட காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஜன.17 இரவுரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

News January 17, 2025

ஜல்லிக்கட்டு 4வது சுற்று: வீரர்கள் உட்பட 30 பேர் படுகாயம்

image

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. காலை முதல் நடைபெற்ற போட்டியில் இதுவரையில் நான்கு சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்கள் உட்பட பார்வையாளர்கள் என 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

News January 17, 2025

சேலத்தில் ரூ.794 கோடியைத் தாண்டியது பயிர்க்கடன்

image

சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன் ரூபாய் 794 கோடியைத் தாண்டியது. 88,000 விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் வரும் மார்ச் மாதத்திற்குள் ரூபாய் 1,007 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு 7% வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்படுகின்றன.

News January 17, 2025

சேலம்: பொங்கலில் பொங்கிய டாஸ்மாக் விற்பனை

image

காணும் பொங்கலை முன்னிட்டு, நேற்று (ஜன.16) சேலம் மண்டல டாஸ்மாக் நிர்வாகத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை களைகட்டியது. வழக்கமாக நடக்கும் விற்பனையைக் காட்டிலும் 30% விற்பனை அதிகரித்து இருந்தது என சேலம் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

News January 17, 2025

அரசு பஸ்கள் மூலம் ரூ.16 1/2 கோடி டிக்கெட் கட்டணம் வசூல்

image

சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை 5 நாட்கள் இயக்கப்பட்டன. அதன்மூலம் கடந்த 5 நாட்கள் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.16 கோடியே 48 லட்சம் டிக்கெட் கட்டணம் பயணிகளிடம் இருந்து வசூல் ஆகி உள்ளது.

News January 17, 2025

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 8 மணி மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 2) கூலமேடு ஜல்லிக்கட்டு அமைச்சர் துவக்கி வைத்தல் 3) காலை 11 மணி மகுடஞ்சாவடி எருதாட்டம் துவக்கி வைப்பு 4)இரண்டு மணி தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில் எருதாட்டம் 5) நாலு மணி சின்ன நாகலூர் எருதாட்டம் துவக்கம்

error: Content is protected !!