Salem

News April 3, 2025

சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில் நாளை ரத்து

image

யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சேலம், ஆத்தூர் வழியாக இயக்கப்படும் யஷ்வந்த்பூர்- புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் (16573) நாளையும், மறுமார்க்கத்தில், புதுச்சேரி- யஷ்வந்த்பூர் ரயில் (16574) நாளை மறுநாளும் (ஏப்ரல் 05) முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News April 3, 2025

சேலத்தில் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்!

image

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை 2 நாட்கள் மட்டும், உடனடி வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிறசிக்கான விண்ணப்பங்கள் மார்ச் 24- ஆம் தேதி முதல் ஏப்ரல் 13- ஆம் தேதி வரை, இம்மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அலுவலக வேலை நேரங்களில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News April 3, 2025

நாளை முதல் மீண்டும் மெமு ரயில்!

image

பிரக்யாராஜ் மகா கும்பமேளா நிறைவடைந்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 04) முதல் சேலம்- அரக்கோணம், அரக்கோணம்- சேலம் மெமு ரயில்கள் (16087/16088) இயக்கப்படும் என்றும், இந்த ரயில் சேவையைப் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களைத் தவிர்த்து 5 நாட்கள் மட்டும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

News April 3, 2025

மும்பை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் 

image

மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-01005) வருகிற 9-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு சேலம் வந்தடையும். மதியம் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

News April 3, 2025

சேலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1,042 கோடி பயிர்க்கடன்!

image

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1.10 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 1,042 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 1,007 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கை விட கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 3, 2025

சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்திற்கு  கட்டுப்பாடு

image

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். மேலும் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் வருகிற ஏப்ரல் 17-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

ரூ.6,000.. சேலம் விவசாயிகள் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்டத்தில் பி.எம்.கிசான் ஊக்த்தொகை (ரூ.6,000) பெறும் 1,18,341 விவசாயிகளில் தற்போது வரை 64,272 நபர்கள் மட்டுமே அடையாள எண் பெறுவதற்கு பதிவுச் செய்துள்ளனர். மீதமுள்ள 54,069 விவசாயிகள், தொகையை தொடர்ந்து பெற அடையாள எண் பெறுவதற்கு, வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் பதிவுச் செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் சிங்காரம் தெரிவித்துள்ளார். இதனை உங்களுக்கு தெரிந்த விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க!

News April 3, 2025

சேலம்: கொலை வழக்கில் 7 பேர் கைது 

image

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பங்காளியூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 30ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 7 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மனைவி, மகனை தேடி வருகின்றனர்.

News April 2, 2025

இங்கு மாம்பழம் தந்தால் கடன் தீரும்… !

image

சேலம்: அம்மாபேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது குமரகிரி மலையில் அமைந்திருக்கும் தண்டாயுடபாணி கோயில். இங்கு மாம்பழம் தந்து வழிபட்டால் தொழிற் வளர்ச்சி மேம்படும், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஞானப் பழத்திற்காக நடந்த சண்டையில் வெளியேறிய முருகன் இளைப்பாறிய இடம் இது என்பது இத் தலத்தின் வரலாறு. கடன் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 2, 2025

சேலத்தில் வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,870.50 ஆக நிர்ணயம்!

image

நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூபாய் 43.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 1,870.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!