India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

போகி பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை அதிமுக மாவட்ட செயலாளர் சுகுமார் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “பழையன கழிதலும் புதியன புகுதலும் தீமைகள் ஒழிந்து, நல்வினை விளைந்திட அனைவருக்கும் போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்” என தனது மண்சார்ந்த வாழ்த்துக்களை பொதுமக்களுக்கு தெரிவித்தார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.12) போகி திருநாளை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் குற்ற விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேவையற்ற செயலிகளை நீக்கி, நம்பகமான ஆதாரங்களில் இருந்து மட்டும் செயலிகளை நிறுவ வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சைபர் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, புகார்களுக்கு 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ள அறிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மக்களே.., பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க செலவு அதிகம் என்ற கவலை இனி வேண்டாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நிரந்தர பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிகள் / பழங்களை சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர் அருகில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE IT!

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் புகார் பண்ணுங்க. (HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030) பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

ராணிப்பேட்டை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கிலோ அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 0416-2222926, தொழிலாளர் துணை ஆணையர் – 0416-2222926 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர்!

கலவையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், நேற்று(ஜன.13) இரவு மது போதையில் கத்தியால் மனைவியின் கையை வெட்டி துண்டாக்கினார். மேலும் பல இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார் . இதனால், படுகாயமடைந்த லட்சுமி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கலவையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், நேற்று(ஜன.13) இரவு மது போதையில் கத்தியால் மனைவியின் கையை வெட்டி துண்டாக்கினார். மேலும் பல இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார் . இதனால், படுகாயமடைந்த லட்சுமி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

ராணிப்பேட்டை: ஆற்காட்டை அடுத்த எசையனூர் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். இதில் 20 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.