Ranipet

News January 15, 2026

ராணிப்பேட்டையில் TNPSC Group 2 தேர்விற்கான மாதிரி தேர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் TNPSC Group 2 தேர்விற்கான மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி 21,24, 31 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 04172291400 எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News January 15, 2026

ராணிப்பேட்டை: போதையில் கணவன் வெறிச்செயல்!

image

கலவையை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ஆறுமுகம் (65). இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வீட்டில் போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் கத்தியால் மனைவியின் கையை வெட்டினார். இதனால் வலியால் அலறி துடித்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

News January 15, 2026

ராணிப்பேட்டை: தாய் தூக்கிட்டு தற்கொலை!

image

வளையாத்தூர் கிராமம், அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் யோகலட்சுமி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று (ஜன.14) குடும்ப பிரச்சினையினால் மனமுடைந்த இவர் வீட்டில் தூக்குமாட்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன-14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 14, 2026

ராணிப்பேட்டை: தை முதல் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

ராணிப்பேட்டை மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில்
*திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்
*அரக்கோணம் வரதராஜப் பெருமாள் கோயில்
*ஸ்ரீ வராகி அம்மன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

ராணிப்பேட்டை: தை முதல் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

ராணிப்பேட்டை மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில்
*திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்
*அரக்கோணம் வரதராஜப் பெருமாள் கோயில்
*ஸ்ரீ வராகி அம்மன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

ராணிப்பேட்டை: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call..! (CLICK)

image

ராணிப்பேட்டை மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04172-299200) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 14, 2026

ராணிப்பேட்டை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் கலைவிழா வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது. முத்துக்கடை பேருந்து நிலையம் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறும். இதில் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று காலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். இதில் அனைத்து பொதுமக்களும் வருகை தந்து சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

ராணிப்பேட்டை: பூட்டிய வீட்டில் வாலிபர் பிணம்

image

நந்தியாலம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் இன்று (ஜன.14) பூட்டப்பட்டிருந்த வீட்டில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் இன்று இரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

முதலமைச்சரை சந்தித்த ராணிப்பேட்டை அமைச்சர்

image

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர். காந்தி இன்று (ஜன.14) நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் உடன் ராணிப்பேட்டை மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டார்.

error: Content is protected !!