Ramanathapuram

News April 18, 2024

பாதுகாப்பு பணியில் 2700 பேர் – எஸ்பி

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி மத்திய காவல் படையினர், தமிழ்நாடு காவல்துறை, ஊர்க்காவல் படைவீரர்கள் என மொத்தம் 2700 பேர் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். மாவட்டம் முழுவதும் 17 அதிவிரைவு படையினர், 16 விரைவு நடவடிக்கை குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 90 பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்.

News April 18, 2024

ராமநாதபுரம்: உங்கள் பெயர் இருக்கா? இல்லையா?

image

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.

News April 18, 2024

ராமநாதபுரம்: 40 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

ராமநாதபுரம் கேணிக்கரை சப் இன்ஸ்பெக்டர் சபிதா ஸ்ரீ தலைமையிலான போலீசார் பேராவூர் பகுதியில் ரோந்து சென்றபோது அப்பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த கவரங்குளம் கொத்தன் மகன் கந்தசாமி (47), என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 18, 2024

ராமநாதபுரம் கலெக்டர் வேண்டுகோள்

image

நாளை (ஏப்.19) நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்கள், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் வசித்து வரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டுரிமை உள்ள வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை மட்டுமின்றி கடமையும் ஆகும் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 18, 2024

ராமநாதபுரம்: 40 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

ராமநாதபுரம் கேணிக்கரை சப் இன்ஸ்பெக்டர் சபிதா ஸ்ரீ தலைமையிலான போலீசார் பேராவூர் பகுதியில் ரோந்து சென்றபோது அப்பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த கவரங்குளம் கொத்தன் மகன் கந்தசாமி (47), என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 17, 2024

ராமநாதபுரம்: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா

image

ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியதில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த ரூ. 12ஆயிரத்து 500 பணம், 16 வாக்காளர் அடையாள அட்டைகள் ஜஹாங்கீர் என்பவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 17, 2024

முன்னாள் முதல்வர் பிரசார ஊர்வலம் நிறைவு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ராமநாதபுரம் நகரில் இன்று மதியம் பிரசார வாகனத்தில் ஊர்வலம் சென்று வாக்கு சேகரித்தார். அரண்மனை பகுதியில் துவங்கி வழிவிடும் முருகன் கோவில், வண்டிக்காரத்தெரு , சிவன் கோயில் பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

News April 17, 2024

ராமநாதபுரம்: நிர்வாகிகள் சந்திப்பு

image

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்பாக பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர்
முரளி, ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் GBS நாகேந்திரன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் தர்மர், ஒன்றிய செயலாளர் முத்து முருகன் ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துக் கொண்டனர்.

News April 17, 2024

டிராக்டர் மீது பைக் மோதி இருவர் உயிரிழப்பு

image

கமுதி செங்கப்படையை சேர்ந்தவர் முனியசாமி (35). இவரும், இவரது உறவினர் பாண்டி (36) என்பவரும் பைக்கில் நேற்று சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சோலார் மின் உற்பத்தி மையம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். பாண்டி படுகாயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 17, 2024

ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் குழு விரைவில் மறு ஆய்வு

image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தற்காலிகமாக கல்வி பயின்று வருகின்றனர். தங்களுக்கு கல்வி பயில அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவில்லை என்று கூறி எய்ம்ஸ் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவக் குழு விரைவில் ராமநாதபுரம் வந்து அடிப்படை கட்டமைப்புகளை மறுஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது.