India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவுக்காக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் முனியசாமி வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர் ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை ஏப்.30-க்கு ஒத்திவைத்தார்.
ராம்நாடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா நேற்று (ஏப்.22) முதல் ஜூன் 20 வரை நீண்ட விடுப்பில் செல்வதால் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக முழு கூடுதல் பொறுப்பில் செயல்படுவார் என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நிதி ஆதாரத்துடன்கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பரமக்குடியில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பரமக்குடியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 04.05.2024 (சனிக்கிழமை) வேலை நாளாக ஈடுசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம், திருப்பூர், கோவை, திருவாரூர், தஞ்சாவூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தோல் தைத்து தருபவர்களிடம் நகராட்சி நிர்வாகம் 100 ரூபாய் முதல் வரி வசூல் செய்கின்றனர். வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் சேவை செய்து வரும் இவர்களிடம் நகராட்சி நிர்வாகம் கூடுதல் வரி வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை சேர்ந்த பாண்டி என்பவரது மகள் லத்திகா (18), இவர் ராமநாதபுரம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்துவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தாயார் முத்துலெட்சுமி அளித்த புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் துணை மின் நிலையம் ராமேஸ்வரம் நகர்புறம், பர்வதம், ஓலைக்குடா, சம்பை, மாங்காடு, வடகாடு,
வேர்கோடு, புதுரோடு, செம்மமடம், மெய்யம்புளி, அரியாங்குண்டு, பேக்கரும்பு தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் ஏப்.24, 25-ல்
மின் பாதை மேம்பாட்டு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.
24, 25-ல் காலை 8 மணி முதல் 4:30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என
ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, “அனைத்து உயிர்களிடத்தும் அன்புகாட்டி வாழ வேண்டும் என்கிற அறநெறியைப்
பரப்பிய பகவான் மகாவீரர் பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்த இனிய நாளில்,அன்பின் வழியில் அறநெறி சார்ந்த வாழ்க்கையை நாம் அனைவரும் மேற்கொள்ள உறுதி ஏற்போம்” என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக கடலில் மீன் வளம் காக்க ஏப்.14 முதல் ஜூன் 14 வரை 61 நாள் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இக்கால கட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் தவிர 5 நாட்டிக்கல் எல்லைக்குள் நாட்டுப்படகு மீன்பிடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பாம்பன் கடலில் நாட்டுப்படகு மீன்பிடி கடந்த சில நாட்களாக களை கட்டியுள்ளது. கரை திரும்பும் படகுகளில் குவியும் மீன்களை கேரளா அனுப்ப வியாபாரிகள் இன்று குவிந்தனர்.
ராமநாதபுரம் அண்ணா பல்கலை கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 அறைகளிலும் ஒவ்வொரு அறைக்கும் இரண்டு ஆயுதம் ஏந்திய காவலர்கள் மற்றும் ஒரு கண்காணிப்பு அதிகாரி என அறைக்கு மூன்று பேர் வீதம் 18 பேர், துணை ராணுவ படை வீரர்கள், பட்டாலியன் மற்றும் 195 உள்ளூர் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என எஸ்பி சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.