Ramanathapuram

News December 3, 2024

சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் தாமதமாக புறப்படும்

image

சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக இன்று இரவு 9.15 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பயணிகள் அதற்கேற்றார் போல் தங்களை திட்டங்களை வகுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கனவே புயல் காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2024

ராமேஸ்வரம் மீனவர் 20 பேர் விடுதலை 

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நவ.10 ல் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொழிலுக்குச் சென்றன. நடுக்கடலில் அன்று நள்ளிரவு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 3 படகுகளில் இருந்த ராமேஸ்வரம் மீனவர் 23 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மீனவர் 20 பேரை விடுதலை செய்து படகோட்டி 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

News December 3, 2024

இலங்கை போலீசார் வழக்கு ஒத்திவைப்பு

image

இலங்கை கொழும்பு புறநகர் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதை பொருளை கைப்பற்றிய வழக்கில் இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றிய பிரதீப்குமார் பண்டாரா தமிழகத்திற்கு அகதியாக தப்பி வந்தவரை கைது செய்தனர். தற்போது ஜாமீனில் திருச்சி முகாமில் இருக்கும் நிலையில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்றுஆஜரானார். வழக்கு விசாரணையை டிச.10ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

News December 3, 2024

ஹிந்து பாரத முன்னணி இசைவாணி மீது புகார்

image

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஹிந்து பாரத முன்னணி மாநிலச் செயலாளர் ஹரிதாஸ் சர்மா நேற்று புகார் மனு அளித்தார். அதில், நீலம் கலாச்சார மையத்தின் நிறுவனத் தலைவர் இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பாடகி இசைவாணி சுவாமி ஐயப்பன் குறித்து அவதுாறாக பாடியுள்ளார். பக்தர்கள் மனதை புண்படுத்திய இசைவாணி, பா.ரஞ்சித் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

News December 2, 2024

தூய்மை பணியாளரை கெளரவித்த ஆட்சியர்

image

கடந்த அக்டோபர் 28, 29, 30 ஆகிய தினங்களில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அங்கு தூய்மை பணியை சிறப்புடன் செயல்பட்ட தூய்மை பணியாளர் முருகேசனுக்கு மாவட்ட ஆட்சியர் சான்று வழங்கி கௌரவித்தார்.

News December 2, 2024

மக்கள் குறை தீர் நாளில் குவிந்த மனுக்கள்

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு, குடிநீர் இணைப்பு தொடர்பாக 307 பேர் மனு அளித்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி தனலட்சுமி, வழங்கல் அலுவலர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News December 1, 2024

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது 

image

திருவாடானை அருகே செவ்வாய்பேட்டை பகுதி கொடிக்குளம் கிராமப் பகுதியில் திருவாடானை காவல் நிலையத்தினர் இன்று (நவ.1) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சுமோ காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 50 கிலோ வீதம் 25 மூட்டைகளில் 1250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கடலாடியை சேர்ந்த  ராஜேஷ் குமார் என்பவரை கைது செய்தனர்.

News December 1, 2024

பரமக்குடி தபால் நிலையத்தை மூடக்கூடாது – நவாஸ் கனி 

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆர்எம்எஸ் தபால் நிலையத்தை மதுரை தபால் நிலையத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். 1984 அம் ஆண்டு துவக்கப்பட்டு தற்போது மூவாயிரம் பதிவு தபால்களுக்கு மேல் கையாளும் விதமாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்ததபால் நிலையத்தை மூடக்கூடாது என  ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News December 1, 2024

பாம்பனில் ஏற்பட்ட மூன்றாம் எண் புயல் கூண்டு இறக்கம்

image

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக பாம்பனில் உள்ள கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது புயல் புதுச்சேரி இடையை நேற்று இரவு கரையை கடந்ததால் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட மூன்றாம் எண் புயல் கூண்டு இன்று காலை (டிச.1) இறக்கப்பட்டது.

News December 1, 2024

தொண்டி: பெண் வயிற்றிலிருந்து 5 கிலோ கட்டி அகற்றம்

image

ராமநாதபுரம் மாவட்டம், சம்பா நட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருளம்மாள். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் தொண்டியில் உள்ள ஏ.வி.கே ஆஸ்பத்திரியில் பரிசோதித்த போது வயிற்றில் கட்டி இருப்பதை கண்டறிந்தனர். டாக்டர் சேகர் ஆலோசனைப்படி டாக்டர்கள் சதீஷ், மயக்க மருந்து டாக்டர் ரஜினி ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து 5 கிலோ நீர்க் கட்டியை வெற்றிகரமாக அகற்றினர அகற்றினர்.

error: Content is protected !!