Ramanathapuram

News December 8, 2024

பள்ளியில் வினாடி வினா போட்டிகள்

image

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வினாடி வினா போட்டிகள் நேற்று நடைபெற்றது. மேத் கியூஸ் ஜீரோ கிரான்ட்’ என்ற பெயரில் நடந்த இப்போட்டிக்கு பள்ளியின் நிறுவனர்கள் ஜி.சுப்பிரமணியம், எம்.பிரேமலெட்சுமி ஆகியோர் லைமை வகித்தனர்.  இதில் தாளாளர் ஹர்ஷவர்த்தன் போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் 15 பள்ளிகள் பங்கேற்றன. செய்யது அம்மாள் பப்ளிக்பள்ளி முதலிடம் பெற்று சுழல் கேடயத்தை வென்றது.

News December 8, 2024

உழவர் பாதுகாப்புத் திட்டத்திற்கு அழைப்பு

image

திருவாடானை தாலுகாவில் உள்ள விவசாயிகள் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் விவசாயிகளாக பதிவு பெற்றவர்களின் மகன், மகள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் அல்லது தொழிற்கல்வி படிப்புகள் அல்லது பட்டயப்படிப்பு படித்தால் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதனை பெற வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் அல்லது சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

News December 8, 2024

மண்டபம் மீனவர் 8 பேர் 2 படகுகளுடன் இலங்கையில் கைது

image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடல் பகுதியில் இருந்து நேற்று 300 கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொழிலுக்கு சென்றன. இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர் 8 பேரை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனால் மண்டபம் மேற்கு வாடி, கோயில் வாடி மீன்பிடி இறங்கு தள மீனவர்களிடம் பரபரப்பு நிலவுகிறது.

News December 7, 2024

குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

image

எமனேஸ்வரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (40). இவர் காந்தி நகர் குளத்தில் இன்று மாலை குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததால் உடன் குளிக்கச் சென்றோர் ஷேக் அப்துல்லாவை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சோதனையில் அவர் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது. இது குறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 7, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேநீர் விருந்து

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(டிச.07) கொடிநாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் தேநீர் விருந்து நிகழச்சி நடைபெற்றது. முன்னதாக கொடிநாள் தினத்தையொட்டி கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 7, 2024

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி

image

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய ஆதார் அட்டை எடுப்பது, ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது உள்ளிட்ட ஆதார் குறித்த பணிகளுக்கு வெளியில் சென்றனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் தற்போது அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள தொடக்க நிலை உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தெரிவித்தார்.

News December 7, 2024

2 ஆம் கட்ட நிவாரண பொருள்கள் அனுப்பிய கலெக்டர்

image

பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பாதித்தோருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக ரூ.9,30,200 மதிப்பில் அத்தியாவசிய உணவு பொருட்கள் டிச.4 இல் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.8,17,500 மதிப்பில் அரிசி, பருப்பு, மசாலா பொருட்களை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் 2 ஆம் கட்டமாக நேற்று (டிச.6 ) அனுப்பி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News December 7, 2024

தொண்டி அருகே அரிய வகை ஆமை

image

தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் நேற்று அதிகாலை நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். நீண்ட தூரம் சென்று மீன்பிடித்த போது 15 கிலோ அரிய வகை கடல் ஆமை சிக்கியது. பின் போலீசார் உதவியுடன் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது. இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கம் என்றனர்.

News December 6, 2024

ராமநாதபுரம் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

image

கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்கு வைகை ஆற்று நீரை பரளை கால்வாய் வழியாக திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முதுகுளத்தூரை சேர்ந்த சதீஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் பொதுப்பணி துறை செயலர், ராமநாதபுரம் கலெக்டர் பரிசீலித்து 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

News December 6, 2024

திருவாடானை அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

image

திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை குரூப் கரைய கோட்டை கிராமத்தில் இன்று இரைதேடி குடியிருப்புக்குள் சென்ற புள்ளிமான் ஒன்றை பார்த்த நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!