India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய வானிலை ஆய்வு மைய சென்னை மண்டல அறிவிப்பு படி இந்திய கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கடலில் காற்று வேகம் 35 45 கிமீ, அதிகபட்சம் 55 கிமீ வரை வீச கூடும். மறு அறிவிப்பு வரும் வரை படகுகள் தொழிலுக்கு செல்ல வேண்டாம். நாளை(டிச.11) வட கடல் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படமாட்டாது என மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் அறிவித்துள்ளார்
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.13 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ முடித்த வேலை நாடும் இளையோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று(டிச.10) தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக குற்றத்தடுப்பு செயல்களில் காவல் துறையில் சிறப்பாக தனது பணியை செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் 100 பேருக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS., பாராட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வரும் மன்னர் வளைகுடா அருகே நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்ற காரணத்தால், இராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நாளை(டிச.13) முதல் மழையானது படிப்படியாக துவங்கும். மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோரத்தை ஒட்டிய ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது
நவ.9 தேதியன்று மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் & அவர்களது 3 விசைபடகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவிடம் மன்னிப்பு கோரியதன் மூலம் நேற்று(டிச.9) விடுவிக்கப்பட்டு கொழும்பில் இருந்து 21 மீனவர்களும் விமானம் முலம் சென்னை வந்து பின், வேன் மூலம் நேற்று இரவு ராமேஸ்வரம் வந்தனர்.
ராமநாதபுரம் கீழக்கரை கீழத்தில்லையேந்தலில் பொது பிரச்னைகளில் தலையிடுவதாக கூறி ஊரை விட்டு ஒதுக்கியதால் இரு குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகாரளித்தனர். கீழத்தில்லையேந்தலைச் சேர்ந்த தியாகு கூறுகையில், ஊரில் எனது சகோதரர்களுடன் கூட்டு குடும்பமாக வாழ்கிறோம். நானும், அண்ணணும் மே மாதம் சந்தா கொடுத்த போது ஊரார் வாங்க மறுத்து உங்களை ஒதுக்கி வைத்துள்ளதாக கூறிவிட்டனர்.
பரமக்குடியில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ரயில் நிலையம் அருகில் உள்ள RMS தபால் பிரிப்பகத்தை மூடிவிட்டு மதுரையில் உள்ள தபால் நிலையத்தோடு இணைப்பதை கைவிட வேண்டும் என காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, விவசாய கட்சி என அனைத்து கட்சியினர் மற்றும் சமுக ஆர்வலர்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் 3 ஆண்டுகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் 1164 மோசடி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் 20 பேர் பணிபுரிவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டுள்ளது.இதில் 193 புகார்களுக்கு நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டுள்ளன.
மண்டபம் மரைக்காயர் பட்டிணம் மன்னார் வளைகுடா கடலில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.1 மில்லியன் பச்சைவரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இத்திட்டம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரையிலும் சுமார் 105.64 மில்லியன் பச்சைவரி இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பரமக்குடி கைத்தறி நெசவாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ காப்பீடு அட்டை செயல்படுத்தப்பட்டு வந்தது. திட்டம் கைவிடப்பட்ட நிலையில் நெசவாளர் குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் சிரமம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைத்து நெசவாளர்களையும் இணைக்க டிச.10 முதல் 25 வரை முகாம் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.