India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுர மாவட்டத்தில் கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கொத்தனார் பன்னீர்செல்வம் (41). இவரது மனைவி சரண்யா (38). கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் இன்று காலை தனது மனைவி சரண்யாவை கொலை செய்துவிட்டு கத்தியால் தனக்குத்தானே குத்தி தற்கொலை செய்துகொண்டார். கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிநேகவல்லி அம்மன் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ அறம்வளர்த்த பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 5ஆம் திருநாளையொட்டி பிடாரி அம்மன் செங்காளி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை முத்துக்குமார் பட்டர் செய்திருந்தார்.
தாமரைக்குளம் அருகே வலங்காபுரியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மனைவியுடன் அங்குள்ள கடற்கரை பகுதியில் நடந்து சென்றார். அங்கு அங்கு உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு பெருங்குளத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் நடந்துவந்தார். இதனால், மணிகண்டன் மனைவி முகம் சுழித்தார். இதனை கண்டித்த மணிகண்டனை, கேதீஸ்வரன் (24) மரக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்படி உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் டூவீலர் மற்றும் கார்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. நேற்றுமுதல் இது நடைமுறைக்கு வந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியார் டூவீலர் மற்றும் கார்களில் ஒட்டிய ஸ்டிக்கர்களை இன்றைக்குள் அகற்றிட வேண்டும் என்றும், அகற்றாத வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்தீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகள் தாவரவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக நாசர் என்பவர் பணிபுரிந்தார். வருகிற 31ஆம் தேதி இவரது பணி நாள் முடிவுறுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த தாவரவியல் ஆசிரியர்கள் பாராட்டு விழா நடத்தினார்கள். இதில் துறை சார்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சாயல்குடி அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் மறக்குளம்
சதீஷ்குமார் (33), சின்ன உடப்பங்குளம்
பழனிமுருகன் (28) ஆகியோர் டூவிலரில் இன்று மாலை
பரளச்சி சென்றனர். அப்போது சாயல்குடி சென்ற டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரில் வந்த இருவரும் இறந்தனர். இருவரின் உடல் கமுதி அரசு மருத்துவமனை அனுப்பப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பரமக்குடி அருகே பெத்தனந்தலை சேர்ந்த ஜோதி என்ற பெண் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பின்புறம் அமைந்துள்ள கூட்டுறவு வங்கியின் முன்பு இன்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். பின்பு வங்கிக்குள் சென்றுவிட்டு திரும்பி வரும்பொழுது வண்டியின் லாக்கர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 1 லட்சத்து பத்தாயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பொட்டலங்களில் காலாவதி தேதி இன்றி விற்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் தலைமையில் இன்று ஆய்வு நடந்தது. ஆய்வில் முகப்பு சீட்டு இல்லா பொட்டலங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பிரசாத பொட்டலங்களில் தயாரிப்பு, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் அச்சிட்டு விற்க அறிவுறுத்தப்பட்டது.
தொண்டியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து விடுபட பொதுமக்கள் அதிகளவில் இளநீர் குடித்து வருகின்றனர். இதனால் இங்கு இளநீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு ரூபாய் 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.