Ramanathapuram

News January 6, 2025

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நாளை மறியல்

image

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வளர்ச்சித் துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றிலும் கைவிட வேண்டும் உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம்சார்பில் நாளை (ஜன.7) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

News January 6, 2025

ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

image

உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு ஜன 13, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, ஜன.25 ஈடு கட்டும் பணி நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஜன.17 உள்ளூர் விடுமுறை அளித்தது; இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.13 உள்ளூர் விடுமுறைக்கு பிப்.1 (சனிக்கிழமை) ஈடு கட்டும் பணி நாளாக கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர்*

News January 6, 2025

ராமநாதபுரம் முகவை கலைஞர்கள் 2025 கலைப்போட்டிகள்

image

ராமநாதபுரம் மாவட்டம் விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் முகவை கலைஞர்கள் 2025 மாபெரும் மாநில அளவிலான விளையாட்டு & கலை போட்டிகள் ராமநாதபுரம் சொக்கலிங்கபுரத்தில் உள்ள என்பான் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19.1.2025 காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளது. 12/1/2025ம் தேதிக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளவும். வேறு தகவலுக்கு 9944731069, 9786072155 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். *ஷேர்*

News January 6, 2025

ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை வெளியீடு

image

தமிழகத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் நவ. மாதம் நடைபெற்ற நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 63,612,950. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 593,592, பெண்கள் 603,570, மூன்றாம் பாலினத்தவர் 66 என மொத்தம் 1,197,228 வாக்காளர்கள் பட்டியல் மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்டது. ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். *ஷேர்*

News January 6, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.06) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2025

மயானத்திற்கு சாலை இல்லாத கிராம மக்களின் அவலநிலை

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழக்கோட்டையில் மயானத்திற்கு ரோடு வசதியில்லாததால் இறந்தவர் உடலை வயல்வெளியில் கிராமத்தினர் கொண்டு சென்றனர். கிராம மக்கள் ஒவ்வொரு முறையும் மழை நேரங்களில் நெல் வயல்களில் 3 கி.மீ தூரம் சகதிக்கு மத்தியில் இறந்தவர் உடலை கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.மாவட்ட நிர்வாகம் உடனடியாக மயானத்திற்கு சாலை அமைத்துத்தர கிராம மக்கள் கோரிக்கையிட்டனர்.

News January 6, 2025

ராமநாதபுரத்தில் 9ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்க கடலில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலை கொள்ள வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் டிச.9ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் வரும் எட்டாம் தேதி வரை பெரும்பாலும் பனிப்பொழிவு நிலவுவதாக காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

News January 5, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் 

image

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News January 5, 2025

வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து ஆலோசனை

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஷ் சாப்ரா தலைமையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உடன் இருந்தார்.

News January 5, 2025

ராமேஸ்வரத்துக்கு கடத்த முயன்ற 11.5 கிலோ தங்கம் 

image

இலங்கை கல்பட்டி கடல் பகுதியில் இலங்கை பதிவு எண் கொண்ட பிளாஸ்டிக் படகு ஒன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்று கொண்டு இருந்தது. உடனே அந்த படகை மடக்கி சோதனை செய்த போது 11.5 கிலோ தங்கக்கட்டிகள் ராமேஸ்வரத்துக்கு கடத்த முயற்சி நடந்துள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை இலங்கை போலிசார் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

error: Content is protected !!