Ramanathapuram

News January 8, 2025

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் மூன்று பவுன் தங்க செயின் பறிப்பு

image

பரமக்குடி பாரதி நகர் சேர்ந்த சரவணன் மனைவி லதா இன்று பரமக்குடி 5 முனை சாலையிலிருந்து 26ம் நம்பர் நகரப் பேருந்தில் ஏறி அவரது சொந்த ஊரான கச்சாத்த நல்லூர் செல்லும் போது மர்ம நபர்கள் லதாவின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் செயினை பறித்து பேருந்தில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து லதா பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 8, 2025

எஸ் பி அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாம்

image

இராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம்காத்தானில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(ஜன.8) குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்,IPS., பொதுமக்களிடம் வந்த ஏராளமான புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

News January 8, 2025

இராமநாதபுரத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி

image

நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.42.90 கோடி மதிப்பில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி, துவங்கி வைத்தார்கள். உடன் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டார்கள். *ஷேர்*

News January 8, 2025

பெண் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

image

ஆர் எஸ் மங்கலம் வட்டம் கொடுங்குளத்தை சேர்ந்த அந்தோணிசாமி மனைவி செல்வி (எ) அருள் மலர் ஜன.3 ல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இறந்தார். எவ்வித தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை அடக்கம் செய்தனர். அந்தோணிசாமி புகாரில் தேவகோட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். இதன்படி, ஆர்எஸ்மங்கலம் தாசில்தார், தேவகோட்டை டிஎஸ்பி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர் செல்வி உடலை நேற்று பிரேத பரிசோதனை செய்தனர

News January 8, 2025

இராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்ட வேண்டாம்

image

இலங்கை கடற்படையினர் அவரது எல்லைப் பகுதியில் இன்று (ஜன 08) துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருப்பதால், இராமேஸ்வரம் மீனவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மேலும் பாதுகாப்பாக நமது எல்லைக்குள் மீன் பிடிக்குமாறு இராமேஸ்வரம் மீன் வளத்துறை அறிவிப்பு. 

News January 7, 2025

பி.கீரந்தையில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்

image

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் பி.கீரந்தை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை (08.01.2025) காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் அரசின் பல்வேறு துறை சாதனை கண்காட்சி, வேளாண், தோட்டக்கலை உற்பத்தி பொருட்கள் கண்காட்சி, மருத்துவ முகாம் இடம் பெற உள்ளது. முன் மனு பெறப்பட்டு தேர்வான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது.

News January 7, 2025

ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

இன்று (07.01.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2025

இராமேஸ்வரம் கடல் நீர் உள்வாங்கியது

image

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து 200 மீ., தூரமுள்ள கடல் பகுதியில் நேற்று (ஜன 06) காலை திடீரென கடல்நீர் உள்வாங்கியது. கடலோரத்தில் பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தன. கடலோரத்தில் வாழும் கடல் சிற்பிகள், நண்டுகள் கடல்நீர் இன்றி தத்தளித்தன.பின் மதியம் 2:00 மணிக்கு கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.

News January 7, 2025

பாம்பன் புதிய பாலத்தில் ஜன.10, 11ல் ஆய்வு

image

பாம்பன் கடலில் அதி நவீன தொழில்நுட்பத்தில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 2024 அக்.1 ல் ரயில் போக்குவரத்து துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. பல்வேறு காரணங்களால் ரயில் போக்குவரத்து துவங்குவதில் தாமதம் நிலவுகிறது. ஜன.26ல் ரயில் சேவை துவங்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்புதிய பாலத்தில் தெற்கு ரயில்வே வாரிய உறுப்பினர்கள் ஜன .10 ,11 ல் ஆய்வு செய்ய உள்ளனர்.

News January 7, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!