India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்ட அரசுத் துறை ஓய்வூதியர் குறை தீர் கூட்டம் பிப்.6 காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை முன்னோடிகளாக ஓய்வூதியர் குறை தீர் நாள் மனு, மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் என முகவரியுடன் 2 பிரதிகளை ஜன 31க்குள் அனுப்பலாம் விண்ணப்பம் அனுப்பும் ஓய்வூதியர் குறை தீர் நாள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர்
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2024 டிச.12 ல் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் 8 பேரின் வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஜமீல், மீனவர் 8 பேரை விடுதலை செய்தார். படகோட்டிகள் இருவருக்கு தலா ரூ.60 லட்சம் அபராதம் (அ) 6 மாதம் சிறை, மீனவர் 6 பேருக்கு தலா ரூ.50 லட்சம் அபராதம் (அ) 4 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். .
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.22) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
திருவாடானை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் தலைமையில் தொண்டி வெள்ளைமணல் தெருவில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஆய்வு நடத்தினர்.இத்தெருவில் ரேஷன் கடை அருகே மளிகை கடை நடத்தும் பீர்முகமது 66, வீட்டில் 35 சாக்கு மூடைகளில் 500 கிலோ ரேஷன் அரிசியும், ரசீனா 60, வீட்டில் 10 பிளாஸ்டிக் டிரம்களில் 400 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று(ஜன.21) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரத்தை அடுத்த சூரங்கோட்டை ஊராட்சியில் உள்ள மேலத்தெருவை சேர்ந்தவர் சக்திராஜன். இவர் ஊராட்சியில் நடக்கின்ற முறைகேடு குடுத்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி ஊராட்சிமன்ற தலைவர் சக்திராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு,தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.24 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. விருப்பமுள்ள வேலைநாடுநர், மாற்றுத்திறன் வேலைநாடுநர், வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர் செய்யுங்கள்*
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.21) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் 11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜன.27 அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜன.25 அன்றும் நடைபெறவுள்ளன. கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்கலாம் என கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தை திருநாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கிடாரம் கபடி கழகம் நடத்தும் மாபெரும் கிராமிய கபடி போட்டி ஜன.22 & 23 ஆகிய தேதிகளில் காலை 6 மணியளவில், செயற்கை ஆடுகளத்தில் கீழக்கிடாரம் கிராம பொதுமக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.20,001, இரண்டா பரிசாக ரூ.17,001, மூன்றாம் பரிசு ரூ.14,001, நான்காம் பரிசு ரூ.10,001, ஐந்து, ஆறு, ஏழு மற்றும் எட்டாம் பரிசாக ரூ.5,001 வழங்கப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.