India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வேர்க்கோடு புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று(ஜன.28), கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் வேர்க்கோடு பங்குதந்தை முன்னிலையில் நடைபெற்றது. இதில் இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் 2021-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கீர்த்திகா முனியசாமிக்கு ஆதரவாக தமிழ் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் தேர்தல் விதிகளை மீறி கொடி, பேனர் மற்றும் வாகனங்கள் அதிகமாக கொண்டு சென்றதால் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஜான்பாண்டியன் ஆஜரானார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி இரு வார முகாம் பிப்.1 முதல் பிப்.14ஆம் தேதி வரை கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் 2.77 லட்சம் டோஸ் கோழிக்கழிச்சல் தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்படவுள்ளது. கோழி வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் மாவட்ட தலைவர் ஷாஜகான், பொதுச்செயலாளர் ஜெய்னுல் ஆலம், துணைத் தலைவர் அப்துல் முத்தலிப், பொருளாளர் பக்ருல் அமீன் ஆகியோர் இன்று மாவட்ட SP சந்தீஷ்யை சந்தித்து மனு அளித்தனர். அதில், எம்பியை அவமரியாதை செய்த வேலூர் இப்ராஹீமை குண்டாஸில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திருந்தனர். பல்வேறு பகுதிகளிலும் வேலூர் இப்ராஹீம் மீது வழக்கு பதியப்படுவது குறிப்பிடத்தக்கது.
திருவாடானை வட்டம் மங்களக்குடி ஊராட்சி ஊமை உடையான் மடை கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜான் பிரிட்டோ. இவர் ஆர்டிஐ பயிற்சியாளராகவும் விளங்கி வருகிறார். மதுரை மத்திய சிறையில் பொது மன்னிப்பு முன் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரியிருந்தார். அதற்கு கிடைத்த தகவலில் 337 பேர் முன் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் பரமக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று மண்டல திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு இயக்குனநரகம் இணைந்து நடத்தும் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் ஐடிஐ, எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத அனைவரும் கலந்து கொள்ளலாம்.
ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில்முறை வல்லுநர் 1 ஆண்டு பணியிடம் (மாதம் ரூ.50,000 தொகுப்பூதியம்) தேர்வு செய்யப்பட உள்ளது. https://ramanathapuram.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் சுய விவர படிவத்தை நிரப்பி மாவட்ட ஆட்சியர், மாவட்டப் புள்ளியல் அலுவலகம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு ஜன.28 மாலை 5 மணிக்குள் அனுப்பலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்தார். *ஷேர்
முதுகுளத்தூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி – முதுகுளத்தூா் அரசுப்பேருந்து பைக் மீது மோதியது. இதில், பேருந்து சக்கரத்தில் சிக்கி 5 மாத குழந்தை ருத்ரன் உயிரிழந்தாா். இதில் பலத்த காயமடைந்த தாய் சத்யாவும், பாட்டி செல்வியும் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு செல்வி உயிரிழந்தாா். எமனேசுவரம் போலீசார் வழக்குப்பதிந்து பேருந்து ஓட்டுநா் கதிரேசனை கைது செய்து விசாரிக்கின்றனா்.
சக்கரக்கோட்டையை சேர்ந்தவர்கள் முத்து, மனைவி ராஜாத்தி(55). 2024 ஜன.26ல் ராஜாத்தி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். தாயின் நினைவாக அவரது குடும்பத்தினர் ரூ.6 லட்சத்தில் வீட்டருகே கோயில் கட்டி 6 அடி உயரத்தில் ராஜாத்தியின் பைபர் சிலை அமைத்துள்ளனர். முதலாம் ஆண்டு நினைவு நாளில் (ஜன.,26) திறப்பு விழா நடந்தது. அமைச்சர்கள் ராஜேந்திரன், கீதாஜீவன், அரசு அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இன்று (ஜன. 27) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என ராமநாதபுரம் காவல் துறை தனது வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.