India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப்.12) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த காரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் இன்று அதிகாலை சோதனையிட்டனர். அதில் தலா 125 கிலோ வீதம் 2 பண்டல்களில் 250 கிலோ கஞ்சா இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் கஞ்சா கொண்டு வந்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழ்புலவர், பிளம்பர், காவலர், கருணை இல்ல காப்பாளர், துப்புரவு பணியாளர், தூர்வை, கால்நடை பராமரிப்பாளர் பணிகளுக்கு 76 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 12.03.2025.(சம்பளம் – ரூ.10,000 – ரூ.58,600) விவரங்களுக்கு rameswaramramanathar.hrce.tn.gov.in . *ஷேர் செய்யுங்கள்.
வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் ராமேஸ்வரம் வட்டம், தெற்கு கரையூர் கிராமத்தில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை (12.02.2025) காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட முன் மனுக்கள் மீதான பரிந்துரைப்படி அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது.
ராமநாதசுவாமி கோயிலில் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு(பிப்.12) இன்று காலை 10 மணியளவில் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பரிவதவர்த்தினி அம்பாள் புறப்பாடானதும் கோயில் நடை சாத்தப்படும். அதன்பின்னர் கோயில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார். *ஷேர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப்.11) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு தனது இரு குழந்தைகளுடன் வந்த சோனியா என்பவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குடுவையை எடுத்து, குழந்தைகள் மீதும், தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இதனை செய்ததாக கூறினார்.
இன்று (பிப். 10) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர் நாள் கூட்டம் வரும் பிப்.14 காலை 10:30 மணிக்கு ஆட்சியரக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில்,விசைப்படகு, நாட்டுப்படகு, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு SHARE
இன்று (10.02.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, இராமேஸ்வரம், கீழக்கரை, முதுகளத்தூர், திருவாடானை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். *ஷேர்
Sorry, no posts matched your criteria.