Ramanathapuram

News March 24, 2026

இராமநாதபுரம்: ஆட்டோ & கார் மோதி விபத்து

image

இராமநாதபுரம் மாவட்டம், பேராவூர் இசிஆர் சாலையில் இன்று
(மார்ச்.24) காலை 9 மணியளவில் ஆட்டோ மற்றும் கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள் ஒரு சில காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இவ்விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

News March 24, 2026

ராமநாதபுரம்: என்.எல்.சி.யில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியாவில் 56 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நெய்வேலியில் 26 பணி இடங்களும், தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் 4 பணி இடங்களும் அடங்கும். ஆர்வமுள்ள 28 -31 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு ஏப்.9 க்குள் விண்ணப்பிக்கலாm. SHARE IT

News March 24, 2026

ராமநாதபுரம்: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

ராமநாதபுரம் மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News March 24, 2026

ராமநாதபுரம் அருகே விபத்தில் வாலிபர் பலி

image

திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள பனைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வைணேஷ்குமார்(21). இவர் நேற்று காலை கருங்குளம் பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்ற போது இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக தெரிகிறது. இதில் இவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் காயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் நகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்: ஒருவர் அடித்துக் கொலை

image

திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியை சேர்ந்த ரமேஷ்(25) தன்னுடைய தாயுடன் நேற்று முந்தினம் இரவு வீட்டின் திண்ணையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீரபாண்டிவலசை பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் இவர்களது வீட்டிற்குள் நுழையமுயன்றதாக கூறப்படும் நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் சசிகுமார் உயிரிழந்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News March 23, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.23) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News March 23, 2026

இராமநாதபுரம்: தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்

image

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முகிழ்தகம் பஞ்சாயத்துக்குட்பட்ட கடம்பனேந்தல் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை, மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என கிராம மக்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஊருக்குள் நுழையும் இடத்தில் பதாதை வைத்துள்னர். மேலும் இதே போல கானாட்டாங்குடியிலும் பதாதை வைக்கப்பட்டுள்ளது.

News March 23, 2026

ராம்நாடு: கேஸ் புக் பண்ண புது வழி!

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

error: Content is protected !!