India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலகு நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதன் படி ராமநாதபுரம் வட்டாட்சியா் ரவி, டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், ஆர் எஸ்.மங்கலம் வட்டாட்சியர் வரதராஜன் டாஸ்மாக் கிடங்கு உதவி மேலாளராகவும், ராமநாதபுரம் வட்டாட்சியர் (ச.பா.தி) பழனிக்குமார், குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் என 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். *ஷேர்
பரமக்குடி, விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரகுமார்(35). மார்ச்.5 இரவு பரமக்குடியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் பேபிகரன், தீனதயாளன், அப்துல் கலாம் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தில் கள்ளிக்கோட்டை நிதிஷ்(26), பரமக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்தார். பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமநாதபுரத்தில் தபால் சேவை குறைதீர் கூட்டமானது அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தலைமையில் மார்ச்.19ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தபால் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். *ஷேர்
தொண்டி, பாசிபட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் முத்துராஜா(35). மாற்றுத் திறனாளியான இவர் மார்ச்.12 இரவு அங்குள்ள மளிகைக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார்(33), லாடையா(38), மாரிக்கண்ணு(46) ஆகியோர் தங்களுடைய வலையை அறுத்துவிட்டார்கள் என்று தகராறில் ஈடுபட்டனர். தகராறில் முத்துராஜாவை கிழே தள்ளியதன் விளைவாக முத்துராஜா இறந்தார். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் – ஹூப்ளி இடையேயான வாராந்திர ரயில் சேவை நீடிப்பு செய்து ஏப்ரல் 12,19,26 ஆகிய நாட்களில் ஹூப்ளியில் இருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு ராமேஸ்வரம் வந்துவிடும். மறுமார்க்கமாக ஏப்ரல் 12, 20, 27 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:40 மணிக்கு ஹூப்ளி செல்லும் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் மணல் திருடிய குணா (எ) சிவக்குமார் மீது பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு எஸ்.பி.சந்தீஷ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்திய-இலங்கை பக்தர்கள் கலந்து கொள்ளும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் மீன்பிடி படகு உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. பக்தர்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை கொண்டு செல்லவோ, தடை செய்யப்பட்ட பொருள்களை எடுத்துச் செல்லவோ கூடாது கச்சத் தீவு சென்று திரும்பும் வரை பாதுகாப்பு உபகரணங்களை அவசியம் அணிய வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இராமநாதபுரத்தில் 3 சென்டி மீட்டர், ஆர்.எஸ் மங்கலம் 25 மி.மீ., மண்டபம் 22 மி.மீ., திருவாடானை 22 மி.மீ., கடலாடி 16 மி.மீ., பரமக்குடி 14.03 மி.மீ., தொண்டி 11 மி.மீ., முதுகுளத்தூர் 9.8 மி.மீ., வாலி நோக்கம் 9.8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பாக பொதுத்துறை அயல்நாடு வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அரேபியாவில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2025. ராமநாதபுரம் மட்டுமில்லாமல் தமிழக முழுவதும் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விவரம் அறிய <
மண்டபம் ரயில்வே நிலையத்திற்கு 100 ஏக்கருக்கு மேல் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலங்கள் மரம் செடிகளுடன் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மண்டபம் ரயில் நிலையம் அருகே மர்ம நபர்கள் மயிலை அடித்து கொன்று எரித்துள்ளனர். இதில் மயில் பாதி எரிந்து கிடந்துள்ளது. தகவலின் பேரில் வந்த மண்டபம் வனச்சரக அதிகாரிகள் மயிலை எடுத்துச் சென்றனர். உணவுக்காக கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் விசாரணை.
Sorry, no posts matched your criteria.