India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய – இலங்கை கடற்படையினர் பாதுகாப்புடன் நடந்த கச்சத்தீவு சர்ச் விழாவில் இரு நாட்டை சேர்ந்த 7000 பேர் பங்கேற்றனர். இராமேஸ்வரத்தில் இருந்து 21 கி.மீ கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் விழா மார்ச்.14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு சர்ச் வளாகத்தில் சிலுவைப்பாதை திருப்பலி பூஜை நடந்தது. சிங்கள மற்றும் தமிழ் மொழியில் பூஜை நடத்தினர். கொடி இறக்கியதும் விழா நேற்று நிறைவு பெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள பழைய ஜும்மா பள்ளிவாசல் இந்தியாவின் மிகவும் பழமையான பள்ளிவாசலாக கருதப்படுகிறது. கி.பி 628ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல் 1000 ஆண்டிற்கும் மேலாக இஸ்லாமிய கலாச்சாரத்தை பறைசாற்றி இருக்கிறது. திராவிட இஸ்லாமிய மற்றும் தமிழ் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது இந்த பள்ளிவாசல். இந்தப் பள்ளிவாசல் 11ஆம் நூற்றாண்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
▶️ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.11.74 கோடியில் சீமைகருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய ஊக்கு விக்கப்படும்.
▶️ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நீர்வடி மேம்ப்பாட்டு திட்டத்திற்காக ரூ.286.79 கோடி ஒதுக்கீடு.
▶️ரூ.68 கோடியில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள்ல் நீர்வழிப்பகுதிகளை தூர்வார, தோட்டக்கலை பயிர்கள், பண்ணைக்காடுகள் அமைக்கப்படும்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், மாவட்ட பார்வை தடுப்பு சங்கத்தில் காலியாக உள்ள பணியியங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கங்களை ramanathapuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்கலாம். SHARE IT
இன்று (மார்ச்.14) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
▶️ராமநாதபுரத்தில் ரூ.21கோடியில் நாவாய் அருங்காட்சியகம்
▶️ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரூ.122 கோடியில் புதிய தொழிற்பயிற்சி மையங்கள்
▶️தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம்
▶️ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம்
▶️ராமநாதபுரத்தில் புதிய மீன்படி இறங்குதளம்
▶️மீன் பிடி தடைக்கால மானியம் ரூ.8000 ஆக உயர்வு
உங்க ஊர் அப்டேட்ட உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
தமிழக அரசின் இறுதி பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம் உருவாக இருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நிதி அறிக்கையில் தெரிவித்தார். *இராமநாதபுரம் சுற்றுலா தளத்தில் மேலும் ஒரு புதிய அடையாளம் உருவாதை ஷேர் செய்து ஊர் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்*
தமிழக அரசின் இறுதி பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் உருவாக இருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நிதி அறிக்கையில் தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்டம் இதன் மூலம் நான்கு வழி போக்குவரத்து உடைய மாவட்டம் என்ற பெருமையை அடைகிறது. *இராமநாதபுரத்திற்கு புதிய அடையாளம் உருவாதை ஷேர் செய்து ஊர் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்*
ராமேஸ்வரம் – ஹூப்ளி இடையேயான வாராந்திர ரயில் சேவை நீடிப்பு செய்து ஏப்ரல் 12,19,26 ஆகிய நாட்களில் ஹூப்ளியில் இருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு ராமேஸ்வரம் வந்துவிடும். மறுமார்க்கமாக ஏப்ரல் 12, 20, 27 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:40 மணிக்கு ஹூப்ளி செல்லும் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
தமிழக அரசின் இறுதி பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராமநாதபுரத்தில் சங்க கால பாண்டியர்களின் கடல் வாணிப சிறப்பை விளக்கும் வகையில் ரூ.21கோடியில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நிதி அறிக்கையில் தெரிவித்தார். *இராமநாதபுரத்திற்கு புதிய அடையாளம் உருவாதை ஷேர் செய்து ஊர் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்*
Sorry, no posts matched your criteria.