India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் அமைந்து வரும் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து பாலம் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது எதிர்காலத்தில் மின்சார ரயில் இயக்குவதற்காக மின்கம்பங்கள் அமைத்து உயர் மின்னழுத்த வயர்களை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாட்டு சாணத்தின் மூலம் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து ஒன்று அடியில் விநாயகர் சிலைகள் தயார் செய்து மண்டபம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இயற்கைக்கு உகந்த வகையில் சிலைகள் தயார் செய்வதால் பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், மண்டபம் முகாம் அரசு மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயக்குமார், அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் குணசேகரன், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மஸுன் பர்வீன், செங்கபடை அரசு ஆதிதிராவிடர் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் லட்சுமணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் வசந்த நகரை சேர்ந்தவர் ராம்குமார் (38). அரண்மனை பகுதியில் உள்ள இவரது மதுபான பாரில் பசும்பொன் நகர் விக்னேஸ்வரன்(24), எம்எஸ்கே நகர் அரவிந்த்(26), தாமரை ஊரணி முகேஷ் கண்ணன்(24) ஆகிய 3 பேர் வந்து பணம் கொடுக்காமல் மது கேட்டு தகராறில் ஈடுபட்டு, அங்குள்ள பொருட்களை சேத படுத்தியுள்ளனர். இது தொடர்பாக ராம்குமார் புகாரின்படி பஜார் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
ராமநாதபுரம் சேதுபதி நகர் 4 ஆவது தெருவை சேர்ந்வர் பூமிநாதன்(50). இவரிடம், ரூ.2.10 கோடி மதிப்பில் நில மோசடி செய்தது தொடர்பாக மான்குண்டு பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, ஜான்சிராணி தம்பதியினரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக நேற்று சோட்டாசாமி(65) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அபர்ணா, காவேரிதாசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(செப்.03) மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் உயிர்கோள காப்பகத்திற்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு ஆகியோர் இருந்தனர்.
பரமக்குடியில் செப்.,11ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வுக்கான நிபந்தனைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று(செப்.,3) வெளியிட்டுள்ளார். அதில், வாடகை வாகனங்களில் வரக்கூடாது; ஜோதி, தொடர் ஓட்டம் எடுத்து செல்லக்கூடாது; வாகனத்தின் மேற்கூறையில் பயணிக்க கூடாது; மாலை 4 மணிக்குள் நினைவேந்தல் நிகழ்வை முடிக்க வேண்டும் உள்ளிட்ட 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பரமக்குடி உழவர் சந்தையில் இன்றைய(செப்.03) காய்கறிகளின் விலை நிலவரம்: 1 கிலோ கத்தரி ரூ.45, தக்காளி ரூ.30, வெண்டை ரூ.25, புடலை ரூ.35, அவரை ரூ.40, கொத்தவரை ரூ.36, மிளகாய் ரூ.60, முருங்கை ரூ.55, தேங்காய் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.35, பெரிய வெங்காயம் ரூ.60 மற்றும் இஞ்சி 200க்கும் கருவேப்பிலை புதினா மல்லி கட்டு 40 ரூபாய்க்கும் அனைத்து வகை கீரை கட்டு ரூபாய் 5க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்ட ரேசன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய 50 டன் எடையுள்ள 960 அரிசி மூடைகளை இரண்டு லாரிகளில் கடத்திச் சென்றது தொடர்பாக இராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து விரைவாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்ட 26 ஆம் ஆண்டு வலுதூக்கும் போட்டியானது பரமக்குடியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் அதிக எடை தூக்கி K.V.ரிஷிகேஷ் ராமநாதபுர “இரும்பு மனிதர்” பட்டத்தை பெற்றார். மேலும் பெண்கள் பிரிவில்V. N. தேஜா அதிக எடை தூக்கி ராமநாதபுர “இரும்புப் பெண்மணி” என்ற பட்டத்தை பெற்றார்.
Sorry, no posts matched your criteria.