India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர்வேணிக்கு நேற்று, சென்னையில் நடந்த ஆசிரியர் தின விழாவில் மாநில நல்லாசிரியர் விருதை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வழங்கி வாழ்த்தினார். அவருடன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 10 பேர் நேற்று நல்லாசிரியர் விருது பெற்றனர்.
நாளை மறுநாள் விநாயகர் சிலை சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டா.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் (மாநில நல்லாசிரியர்) விருது வழங்கும் விழா சென்னையில் இன்று (செப்.5) நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முனைவர் மு.ஜெயக்குமாருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார்.
தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்த கொண்டிருந்த 8 மீனவர்கள் மற்றும் 1 விசைப்படகை கடந்த ஆக.26 அன்று இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது., 8 பேரின் காவல் முடிவடைந்ததையடுத்து இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதில், 5 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய விடுதலையும், 3 பேருக்கு தலா ரூ.50,000 அபாரதமும், தவறினால் 6 மாதம் சிறை எனவும் மன்னார் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காட்டு பரமக்குடியில் அமைந்துள்ள வ.உ.சி.யின் முழு உருவ வெங்கலசிலைக்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் முன்னாள் எம்எல்ஏக்கள் சதன் பிரபாகர், முத்தையா & நகர் மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
நடிகை கௌதமியிடம், அவரது உதவியாளர் அழகப்பன் ராமநாதபுரம் அருகே நிலம் வாங்கி தருவதாக ரூ.3 கோடி ஏமாற்றியுள்ளார். கௌதமி அளித்த புகாரில் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் அழகப்பனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை நேற்று(செப்.,4) ராமநாதபுரம் கோர்ட்டில் வந்தபோது வீடியோ கான்பரன்ஸ் மூலம் அழகப்பன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை விசாரித்த நீதிபதி பிரபாகரன் வழக்கை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ராமநாதபுரம் வன உயிரின குற்றத்தடுப்பு வனக்குழு ஆர்.எஸ். மங்கலம் அருகே முள்ளிக்கொடி வயல்வெளியில் 180 கிலோ கடல் அட்டைகளை வேக வைத்து கொண்டிருந்த தேவிபட்டினத்தை சேர்ந்த 2 பேரை பிடித்தனர். கைப்பற்றிய கடல் அட்டைகளை ராமநாதபுரம் வன உயிரின சரக அலுவலகத்தில் நேற்று (செப்.4) ஒப்படைத்தனர். எதிரிகள் 2 பேரையும் திருவாடானை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா செப்.7 அன்று நடைபெற உள்ளது. இதற்காக ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த சிலைகள் செல்லும் வழித்தடங்களை இன்று மாலை ராமநாதபுரம் எஸ்பி. சந்தீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனையில் காற்றின் திசையால் நீரோட்டம் மாறுவதால் வடக்கு கடல் பகுதியில் உருவாக்கிய மணல் பரப்பில் நடந்து சென்று கரையோரத்தில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே வடக்கு கடல் மணல் பரப்பில் உருவாகும் இயற்கையின் மாயாஜாலத்தின் அழகினை சுற்றுலா பயணிகள். ரசித்து வருகின்றனர்.
அழகப்பா பல்கலைகழக கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டியானது குஞ்சார்வலசை ராஜா கலை, அறிவியல் கல்லூரியில் செப்.3,4ல் நடைப்பெற்றது. கல்லூரி நிறுவனர் ராஜா துவக்கி வைத்த இதில் 36 கல்லூரிகளைச் சேர்ந்த 152 மாணவர்கள் பங்கேற்றனர். ஆடவர் பிரிவில் அழகப்பா பல்கலை கல்லூரி, மகளிர் பிரிவில் அழகப்பா அரசு கலை கல்லூரி முதலிடம் பிடித்தனர். வென்ற அணியினருக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் பரிசு வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.