India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரத்தில் சில தினங்களாக ஏராளமான திருமணங்கள் நடந்தது. இதில் குழந்தை திருமணங்கள் நடக்கிறதா என சம்பந்தப்பட்டதுறையினர் விழிப்புணர்வுடன் இருந்து வந்தனர். இந்நிலையில் 1098 எண்ணிற்கு வந்த தகவலின்படி ராமநாதபரம் மாவட்டத்தில் 2 நாட்களில் 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 14 வயதுடைய 2 சிறுமிகள், 17 வயது சிறுமிகள் 2 பேர் என மொத்தம் 4 சிறுமிகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவாஸ் கனி இன்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பரமக்குடிக்கு கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து பிரச்சார வாகனத்தில் சந்தக் கடை ஐந்து முனைரோடு பஜார் வழியாக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார். உடன் எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் இருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கு வரும் 27.9.24 அன்று பிற்பகல் 4.30 மணி அளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள் நேரில் வருகைதந்து பயன்பெறுமாறு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6200 நாட்டு படகுகள் மீன்பிடி
தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 3400 படகுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நாட்டு படகுகளை உடனடியாக பதிவு செய்து மீன்பிடி அனுமதி பெறாவிட்டால் மரைன் போலீசார் மூலம் படகுகள் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 ஆண்டுகள் கடந்து பிறப்பு பதிவுகளுக்கு குழந்தையின் பெயரினை பதிவு செய்து பிறப்பு சான்று பெற 5 ஆண்டு நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்த கால அவகாசம் 31.12.2024 உடன் முடிகிறது. எனவே, குழந்தையின் பெயர் இன்றி பிறப்பு சான்று பெறப்பட்டிருந்தால் பெயரை பதிவு செய்து பிறப்பு சான்று பெறவேண்டும். இதற்கான கால அவகாசம் இனி நீட்டிக்கப்படாது என ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி வரும் டிச.14 வரை நடைபெறுகிறது. எழுதுவதில் மகிழ்ச்சி டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஏதாவது ஒரு மொழியில் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.
2025 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் தொகுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், தொகுதி மாற்றம் தொடர்பாக மக்களிடம் பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் சிம்ரன்ஜித் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் – தாம்பரம் பகல் நேர சிறப்பு ரயில் வாரத்தில் 3 நாள் (வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்) சேவை இன்று (செப்.20) துவங்குகிறது. கால அட்டவணைப்படி (வ.எண் 06104) காலை 10:55 மணிக்கு இராமநாதபுரத்தில் புறப்பட்டு பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர், சிதம்பரம், கடலூர், செங்கல்பட்டு வழியாக இன்றிரவு 11:10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை முன்னிட்டு, இன்று(செப்.19) சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயலாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கொலை முயற்சி வழக்கில், 4 ஆண்டுகள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த மாரிமுத்து (27). சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில், மஸ்கட்டில் இருந்து சென்னை வந்தபோது, குடியுரிமை சோதனையில், தலை மறைவு குற்றவாளி சிக்கினார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.