Ramanathapuram

News January 15, 2026

ராம்நாடு : இரண்டு நாள் மது கடைகள் மூடல்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில், 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல். வருகிற ஜன-16 திருவள்ளுவா் தினம், ஜன-26 குடியரசு தினம் ஆகிய இரு நாள்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்து செயல்படும் மதுக் கூடங்கள், வெளிநாட்டு மது வகைகள் விற்பனை உரிமம் பெற்ற கிளப்புகள், உணவகங்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும்.

News January 15, 2026

பரமக்குடியில் போலீசார் ஆய்வு

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் திறப்பு விழாவையொட்டி, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி, IPS இராமநாதபுரம் சரக துணைத் தலைவர் தேஷ்முக் சேகர் சஞ்சய், IPS மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், IPS ஆகியோர்களுடன் இணைந்து நேரில் ஆய்வு செய்தார்.

News January 15, 2026

ராம்நாடு: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

ராம்நாடு மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<> க்ளிக் செய்து<<>> இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News January 14, 2026

இராம்நாடு: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT

News January 14, 2026

இராம்நாடு: அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

இராம்நாடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 14, 2026

ராம்நாடு : போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

இராமநாதபுரம் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் நாளை ஜன.15-க்கு பிறகு இங்<>கு கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

ராம்நாடு: கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

image

ராமேஸ்வரம் அடுத்த கெந்தமாதன பர்வதம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து நீண்ட நேரமாக உயிருக்கு போராடி பரிதாபமாக உயர்ந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் உதவியுடன் உடலை பத்திரமாக மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

News January 14, 2026

ராம்நாடு: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

இராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 14, 2026

பரமக்குடி: இமானுவேல் சேகரன் மணி மண்டபம் ஜன.17 திறப்பு

image

வரும் 17-ம் தேதி மதுரை அலங்​காநல்​லுார் ஜல்​லிக்​கட்டு விழா உள்​ளிட்ட நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க வரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அன்று பரமக்​குடி​யில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கபட்டுள்ள இமானுவேல் சேகரனின் மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்​ளார். இமானுவேல் சேகரன் முழு உருவ சிலையுடன் மணி மண்டபம் கட்டபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!