Ramanathapuram

News September 26, 2024

கமுதியில் பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி

image

கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு போட்டி நடந்தது. 53 ஊராட்சிகளை சேர்ந்த சுயஉதவி குழு பெண்கள் 200 சிறுதானிய உணவு வகைகள் தயாரித்து வைத்தனர். ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் அழகப்பன் முன்னிலை வகித்தார். நத்தம் ஊராட்சி குழு முதல் பரிசும், மண்டல மாணிக்கம் குழு 2-வதும், சடையனேந்தல் குழு 3-வது பரிசும் பெற்றன.

News September 26, 2024

தாய் மகள் கொலை: இலங்கை அகதிக்கு இரட்டை ஆயுள்

image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் காளியம்மாள்(58). இவரது மகள் மணிமேகலை(34). இவர்கள் இருவரையும் 2021ல் இலங்கை அகதி சசிக்குமார்(38) என்பவர் நகைக்காக எரித்து கொலை செய்தார். இந்த வழக்கில் சசிக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்த மற்றொரு அகதி சுப்பிரமணியத்திற்கு 3 ஆண்டு சிறையும் விதித்து ராமநாதபுரம் கோர்ட் நேற்று(செப்.,25) தீர்ப்பளித்துள்ளது.

News September 26, 2024

ராமநாதபுரத்தில் மினி ஜவுளி பூங்கா விழிப்புணர்வு கூட்டம்

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (செப்.25) சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா (Mini Textiles Park) அமைப்பது தொடர்பாக மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குநர் திருவாசகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.

News September 25, 2024

பரமக்குடியைச் சேர்ந்த பெண்மணிக்கு நெசவாளர் விருது

image

சென்னை தலைமைச் செயலகத்தில் 2023-2024ஆம் ஆண்டுக்கான பருத்திப் பிரிவில் சிறந்த நெசவாளருக்கான விருதினை பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த டி.ஜே பிரேமா தமிழக முதல்வர் ஸ்டாலின் கையினால் சான்றிதழையும் ஐந்து லட்சம் மதிப்புள்ள காசோலையையும் இன்று (செப்.25) பெற்றுக் கொண்டார்.

News September 25, 2024

நடிகர் விஜய் கட்சி மாநாட்டிற்கு புதிய சிக்கல்

image

நடிகர் விஜய் கட்சியான த.வெ.க.வின் முதல் மாநாடு அக்.,27-ல் விக்கிரவாண்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மாநாட்டிற்கு அனுமதி, பாதுகாப்பு கோரி கட்சி சார்பில் மனு அளித்து 4 நாள் ஆகியும் இதுவரை விழுப்புரம் காவல்துறை பதிலளிக்கவில்லை. தேவர் ஜெயந்திக்காக போலீசார் ராமநாதபுரத்திற்கு 3 நாள் பாதுகாப்பு பணிக்கு செல்ல இருப்பதால் மாநாட்டில் பாதுகாப்பு பணி மேற்கொள்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

News September 25, 2024

ராமநாதபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.,28ஆம் தேதி ராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது கலை கல்லூரியில் நடைபெறுகிறது. பல தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்வதால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்களுக்கான பணியினை தேர்வு செய்யலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். SHARE IT.

News September 25, 2024

ராமநாதபுரம் நூலகத்தில் அமைச்சர் ஆய்வு!

image

இராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று (24.09.2024) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நூலக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை கண்ட அமைச்சர் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார். ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் உடனிருந்தார். முன்னதாக மாவட்ட மைய நூலகர் அற்புத ஞான ருக்மணி அமைச்சரை வரவேற்றார்.

News September 24, 2024

இராமநாதபுரம் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

இராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோரின் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (செப்.24) காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை மேற்பார்வை பொறியாளர் இராமநாதபுரம் மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் இராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 23, 2024

தொண்டி அருகே கடலில் கவிழ்ந்த படகை மீட்ட மீனவர்கள்

image

தொண்டி அருகே சோழியக்குடி லாஞ்சியடி மீனவர்கள் கடந்த 21ஆம் தேதி மீன் பிடிக்க சென்றபோது கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சக மீனவர்கள் சென்று கண்ணன், பாஸ்கரன், மதியழகன், கந்தன், ராபின்சன், நவனேஷ்
ஆகியோர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்ந்தனர். இந்நிலையில், இன்று (செப்.23) 4 விசை படகில் சென்று 4 படகுகளும் ஒன்றுடன் ஒன்று கயிற்றால் இணைத்து கவிழ்ந்த விசை படகை மீட்டனர்.

News September 23, 2024

இராமநாதபுரம் ஆட்சியரிடத்தில் 352 பேர் மனு

image

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (செப்.23) நடைபெற்றது. கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு, குடிநீர் இணைப்பு கோரி 352 மனுக்கள் குவிந்தன.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ உடனிருந்தனர்.

error: Content is protected !!