India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான கையெறி பந்து, அமர்ந்து விளையாடும் கைப்பந்து போட்டிகள் நடந்தன. இதில் பல மாநிலங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 7 பேர் கொண்ட தமிழக அணியில் கலந்து கொண்ட ராமநாதபுரம் பாரதிநகர் மு.சர்மிளா சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இவர் கம்போடியாவில் நடக்கும் சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளார்
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று (செப்.27) பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் தலைமையில் விளையாடி இரண்டாம் இடம் பெற்ற மாவட்ட காவல்துறை கிரிக்கெட் அணிக்கு எஸ்பி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பரமக்குடி ரயில் நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.9 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. பரமக்குடி ரயில் நிலையத்தில் இருந்து ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனா். ஆண்டுக்கு ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ. 9 கோடி வருவாய் கிடைக்கிறது. இதை கருத்தில் கொண்டு பரமக்குடி வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் பரமகுடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் அக்டோபர் 2ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலலினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை (2023-24), தூய குடிநீர் விநியோகம் உறுதி செய்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த A+ ரவுடியை பல்வேறு முயற்சிகள் செய்து கமுதி தனி படையினர் கைது செய்தனர். கைது செய்த கமுதி காவல்துறையினருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் கைது செய்த காவல்துறையினரை இன்று (செப்.27) பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சமூகநலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையில் அவர்களது கைபேசியிலிருந்தே புகார் அளிக்கும் வகையில் கியூ ஆர் (QR)கோடு வெளியிடப்பட்டுள்ளது.
ஒளி, ஒலி வாயிலாக தெரிந்து கொள்ளும் வகையிலும், மேலும் ராமநாதபுரம் மாவட்ட கல்வி நிறுவனங்களில் புகார் குழு அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் வரும் செப்.28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். எனவே இராமநாதபுரம் மாவட்ட மாநில திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு காதர் பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த (செப்.11) அன்று நடைபெற்ற தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் 56 பேருக்கு நேற்று (செப்.26) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் நேரில் அழைத்து பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் குருக்கள் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா இன்று (செப்.26) விசாரித்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை முறையாக பராமரிப்பது இல்லை எனவும் வசூல்ராஜா MBBS வேலையை மட்டும் செய்கிறது எனவும் கோயில் கணக்கு வழக்குகளை அறிக்கையாக தாக்கல் செய்ய கோயில் செயல் அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி தொடங்கி தற்போது பாலம் பணிகள் முடிந்த நிலையில் நடுவில் துாக்கு பாலத்தை பொருத்தும் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. இந்நேரத்தில் பாலத்தை கடக்கும் மீனவர்கள் மீது கனரக இரும்பு பொருட்கள் தவறி விழுந்தால் ஆபத்து ஏற்படும் என்பதால் மீனவர்கள் பாலத்தை கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளது. இதையும் மீறி சில படகுகள் கடந்து சென்ற வண்ணம் உள்ளன.
Sorry, no posts matched your criteria.