Ramanathapuram

News October 2, 2024

கீழக்கரையில் பருவமழை முன் எச்சரிக்கை கலந்தாய்வு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்குகிறது. வரும் 15-ந் தேதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இதன் மூலம் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வுகூட்டம் கீழக்கரை நகராட்சியில் நடைப்பெற்றது.

News October 2, 2024

இராமநாதபுரம் முன்னாள் அமைச்சருக்கு புதிய பொறுப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அதிமுக மருத்துவரணி துணை செயலாளராக உள்ளார். இவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட பொறுப்பாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் புதிய அதிமுக உறுப்பினர் சீட்டுகள் வழங்கும் பணிகளை மேற்பார்வையிட்டு தலைமைக்கு அறிக்கை அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 2, 2024

இராமநாதபுரம் எம்எல்ஏ பங்கேற்கும் நிகழ்ச்சி

image

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இன்று (அக்.2) காலை 10 மணி இரட்டையூரணியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். காலை 10.30 இரட்டையூரணியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கிறார். மதியம் 12 மணி பாரதி நகரில் காமராஜரின் 50ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்கிறார்.

News October 1, 2024

ராமநாதபுரத்தில் காந்தி ஜெயந்தி – கலெக்டர் மரியாதை

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் நாளை (அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காலை 9.45 மணிக்கு ஓம்சக்தி நகரில் உள்ள காதி கிராப்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து காலை 10.10 மணிக்கு ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 1, 2024

இமானுவேல் சேகரன் பிறந்தநாள் – ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா வருகின்ற அக்.9ம் தேதி பரமக்குடியில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி இன்று(அக்.1) மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் அபிலாஷ் கொளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திஷ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 1, 2024

தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் நேரம் மாற்றம்

image

தாம்பரம் – ராமநாதபுரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில் (06103) அக்.3 முதல் திருவாரூர் – ராமநாதபுரம் இடையே நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. தாம்பரத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் சந்திப்புக்கு நள்ளிரவு 11.15 மணிக்கு பதில், அக்.3 இரவு 10:50 மணிக்கு வந்து சேரும். பரமக்குடிக்கு காலை 4:52 மணிக்கு பதிலாக காலை 4.13 மணிக்கு, ராமநாதபுரத்திற்கு காலை 5:55 மணிக்கு பதிலாக காலை 4.55 மணிக்கு வந்தடையும்

News October 1, 2024

கைதி (லாக் அப் டெத்) மரணம்: 3 போலீசாருக்கு விசாரணை

image

மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன் திருட்டு வழக்கு தொடர்பாக 2012 ஆம் ஆண்டு எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அப்போது, போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் கிருஷ்ணவேல், ஞானசேகரன், கோதண்டராமன் ஆகிய 3 பேரும் நேற்று(செப்.30) மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணை நடத்திய நீதிபதி குமரகுரு வழக்கை வரும் செப்.14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்

News October 1, 2024

பெரியபட்டினத்தில் மாநில அளவில் கால்பந்தாட்ட போட்டி

image

பெரியபட்டினம் கால்பந்தாட்ட குழு சார்பில் மாநில அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. பெரியபட்டினம் கால்பந்தாட்ட வீரர் சுகைல் நினைவாக நடந்த இந்த போட்டிகளில் மாநில அளவில் 40 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் பெரியபட்டினம் ஏ அணியும், குப்பன்வலசை ஜூனியர் அணியும் மோதினர். அதில் 2-1 என்ற கோல் கணக்கில் பெரியபட்டினம் ஏ அணி வென்று முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

News October 1, 2024

கோவை – ராமநாதபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

image

கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து இன்று(அக்.,1) இரவு 7:45 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர் – ராமநாதபுரம் விரைவு வண்டி(16618), நாளை(அக்.,2) ராமநாதபுரத்தில் இருந்து இரவு 8:13 மணிக்கு புறப்படும் ராமநாதபுரம் – கோயம்புத்தூர் விரைவு வண்டியில்(16617) கூடுதலாக ஒரு 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.

News October 1, 2024

துணை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த ராம்நாடு நிர்வாகி

image

ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும், திமுக மாநில தீர்மானக்குழு துணை தலைவருமான சுப திவாகரன் நேற்று(செ.,30) தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!