Ramanathapuram

News November 14, 2024

ராம்நாட்டில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

102 தாய் சேய் நல பிரிவு மற்றும் 108 ஆம்புலன்சில் பணிபுரிய ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை(நவ.15) அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. தகுதி வாய்ந்த நபர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 044-28888060 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News November 14, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 பேருக்கு டெங்கு பாதிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த மழை நீரில் டெங்கு கொசுக்கள் பெருகி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் சிறுவன் சிறுமி உள்பட 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News November 13, 2024

மக்கள் தொடர்பு திட்டம் முகாம்

image

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் பிர்காவுக்கு உட்பட்ட திருத்தேர்வளையில் நாளை ( நவ.14) கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற உள்ளது. எனவே திருத்தேர்வளை, ஆனந்துார், ஆயங்குடி, கீழக்கோட்டை, கப்பகுடி, கரவளத்தி, நாடார் கோட்டை, பொட்டக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் திருத்தேர்வளை சமுதாய கூடத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News November 13, 2024

புள்ளியியல் கையேட்டை வெளியிட்ட ஆட்சியர்

image

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புள்ளியியல் துறை வடிவமைத்த மாவட்ட அரசு அலுவலங்களின் தகவல் அடங்கிய புள்ளியியல் கையேட்டை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டார். இக்கையேட்டில் மாவட்ட மக்கள் தொகை, வேளாண்மை, நீர்பாசனம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், சுகாதாரம், கல்வி, மீன்வளம், தொலை தொடர்பு, உள்ளாட்சி, போக்குவரத்து, மாவட்ட வருவாய் மற்றும் அனைத்துத்துறை அலுவலகங்களின் தரவுகள் உள்ளது.

News November 13, 2024

ராமேஸ்வரம் கோயில் மோசடி வழக்கு ஒத்திவைப்பு

image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஊழியர்கள் 89 பேரின் வருங்கால வைப்பு நிதியில் கடந்த 2019 இல் ரூ.91 லட்சம் மோசடி நடைபெற்றது. இதில் கோயில் முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் உட்பட 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது வழக்கை அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

News November 13, 2024

ராமநாதபுரம்: அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்

image

தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது 2025ல் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ளது. டாக்டர் அம்பேத்கர் விருதை பெறுவதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

ராமநாதபுரம்: மிஷன் வாத்சல்யா திட்டத்தில் மாத நிதி உதவி

image

தாய் தந்தையரை இழந்த, இருவரில் ஒருவரை இழந்த, வருவாய் ஈட்டக்கூடிய தந்தை முடங்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நிதி உதவி அளித்து அவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் மாதம் ரூ.4 ஆயிரம் வழங்கும் மிஷன் வாத்சல்யா நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,330 குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

News November 13, 2024

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் எம்பி கடிதம் 

image

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்டுத்தரக்கோரியும் தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியும் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

ராமநாதபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

இன்று (நவ.12) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை சுதீர்லால் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News November 12, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவில் மழை துவங்க வாய்ப்பு

image

தற்போது இலங்கைக்கு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.12) நள்ளிரவு முதல் மழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.நாளை (நவ.13) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர பகுதிகளில் சற்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

error: Content is protected !!